பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் - 16

வெண்ணிப்போர் III

சங்கப் பாடல்களிலே பத்துப்பாட்டின் இரண்டு பாட்டுக்கள், கடியலூர் உருத்திரக் கண்ணனார் பாடிய பட்டினப் பாலை, முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப் படையும் மூன்றாம் வெண்ணிப் போர் ஆற்றிய இரண்டாம் கரிகாலனைப்பற்றியவையேயாகும். முனைவர் இராசமாணிக்கனார் குறித்தபடி, கரிகாலனைப் பற்றிய பிற்காலப் பெரும் புகழ் மரபின் செயல்கள் யாவும், முதற் கரிகாலனுக்குரியன என்று ஒதுக்கப் பட்டன போக மிகுந்தவை, இவனுக்கே உரியனவாகலாம். முதற்கரிகாலனுக்குரியன என்று ஒதுக்கியவற்றுட் சிலவும் இவற்றுட் சிலவும் ஒரு மூல முதல் கரிகாலனுக்குரியன ஆயினாலும்கூட, இரண்டாம் கரிகாலனின் வரலாற்றுப் பெருமை ஒரு சிறிதும் குறைந்துவிடாது. ஏனெனில் புனைந் துரையோ என வரலாற்றாசிரியர் ஐயுறாத உறுதிச் செயல்கள் பெரும்பாலும் இவன் செயல்களேயாகும்.

வடதிசைப் பெருவெற்றிகள், மேருவைச் செண்டாலடித்தல், டதிசைப் பெருமன்னன் ஒருவன் மூன்று கண்ணில் ஒரு கண்ணைக் கொய்தல், காஞ்சி நகரம் நிறுவுதல் ஆகிய செயல்களே மூன்று கரிகாலனுக்குள் யாருக்குரியன என்று வரையறுக்க முடியாதவை. கல்வெட்டுக்கள் பெருமைபடக்கூறும் கரிகாலன் உறையூரிலே ஆண்டதாகவே நீண்ட கால மரபுரை குறிக்கிறது. 'இரண்டாம்' (கடைசிச் சங்ககாலக்)கரிகாலன் உறையூரில் கோட்டை கொத்தளம் பெருக்கினாலும் காவிரிப் பூம்பட்டினத் திலேயே இருந்து அரசாண்ட தாகத் தெரிகிறது. இது முன் இரு கரிகாலருக்கு மட்டுமே பொருந்ததும், காஞ்சி நகரைக் கரிகாலன் வலிமைப் படுத்தியதாக மட்டும் கொள்ளாமல் புதிது நிறுவியதாக, அல்லது பெருநகராக்கியதாகக் கொள்வதனால், இதுவும் முற்பட்டகரிகாலர்களுக்கே பொருந்தும். ஆயினும்,

'காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி... கோயிலொடு குடி நிறிஇ!’

என்ற பட்டினப்பாலை அடிகளும்,

(பட்,பாலை 244-5.286)