பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

83

மொழி அழகாகப் பதிய வைத்துக் காட்டுவது காண்க.மணமூலம் வந்த புதுஉடன்பிறந்தாள் மைத்துனன் (brother-in-law), அவ்வகை வந்த புதுத்தாய் மாமி (mother-in-law) ஆகிறார்கள். மண உறவு மூலமே சமுதாயச் சட்டமும் அரசியல் சட்டமும் அரசியலும் வளர்ந்தன என்பதையும் இத்தொடர்கள் காட்டுகின்றன. ஏனெனில் இத்தொடரில் மணம் என்பதற்கு அமைந்த சொல்லே (law) இன்று சட்டம் என்ற பொருள் தருகிறது!

சமுதாய வாழ்வு

உயிரினத்தின் குடும்ப வாழ்வில் பிறந்ததுதான் மொழி. குயிலின் கூவல்தான் மொழிகள் அனைத்துக்கும் தாய்! முதல் உயிரினத் தாய்மொழி பாட்டிலிருந்ததனால்தான், மனித இனத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழும் இனிமை என்று பொருள்படுகிறது என்னலாம்!

உ உணவுப் போராட்டத்தில் பயன்பட்ட பண்புகளே காதற் போராட்டத்தில் பயன்பட்டதுபோல, காதற்போராட்டப் பண்புகளே குடும்ப வாழ்வுக்கும் அது கடந்து சமுதாய வாழ்வுக்கும் ன வாழ்வுக்கும் புதுப்புது வகைகளில் பயன் பட்டன.

காதல் வாழ்வில் கொழுநனும் கொடியும் கொஞ்சிப் பேசிய கொஞ்சல் உணர்ச்சிகள் - 'கண்ணே மணியே கற்கண்டே' என்ற இன்றைய மனித இனத்தின் சொற்கள் - தாய் தந்தையர் குழந்தைகளைக் கொஞ்சுவதிலும் பயன்பட்டன. ஆனால், உணர்ச்சிகளின் பண்பு காதலினும் மேம்பட்ட உயர் பண்புகளாக, ஆக்கவளப் பண்புகளாக மாறிவிட்டன. பண்பின் கருத்துப் படிவத்தின் பொங்கல் இது!

தாய் தந்தை பிள்ளை தொடர்பு, இரு பிள்ளைகளிடம் உடன்பிறந்தான், உடன்பிறந்தாள் தொடர்பாயிற்று! மனித இனத்தில் இஃது ஒரு புதுத் தொடர்பு வளர்த்தது. தம் அறிவும் தம் தன்னலச் சூழலும் கடந்து, தம் பாசத்துக்கே முதற் காரணமான ஒரு தாய் தந்தை உணர்வு, தெய்வங்களாகவோ, தெய்வமாகவோ இருந்து தம்மை வளர்க்கின்றது என்று மனித இனம் கண்டது! தாய்ப்பாசம், தந்தைப் பாசம், உடன்பிறப்புப் பாசம் இவையே நட்பு, தோழமை, கூட்டுறவு ஆகிய உணர்ச்சி