பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

அப்பாத்துரையம் – 18

களையும், அருள், அன்பு, அறம்; ஆதரவு, துணை ஆகிய பண்பு களையும் உணர்ச்சிகளையும் சமுதாயத்தில் பரப்பின.

சமுதாய வாழ்வு கூட்டுப் பொங்கலாக ஓங்கிற்று!

கொடுவிலங்குக் கோட்பாடு

உணவுயிர்ப் போராட்டத்தில் ஏற்பட்ட ஆதிக்கவாதம் தன்னலத்தின் பயனேயாகும். ஆனால், அதையே பொதுநலப் பண்பாக்கி, கொலையும் அழிவும் ஆக்கத்துக்குரிய இயற்கை வழி என்று கூறும் அறிஞரும் உண்டு. உண்மையில் உயிர்நூல் அறிஞர்களுள் மிகப்பெரும்பாலோர், தொடக்க உயிர்களிலேயே கருத்துச் செலுத்திய காரணத்தால், இக் கொள்கையையே வற்புறுத்திச் சென்றுள்ளனர்.

இதைக் கொடுவிலங்குக் கோட்பாடு என்று கூறலாம்.

வலிமை குன்றிய எத்தனையோ உயிரினங்கள் அழிந்துள்ளன. வலிமையுடைய ய னங்களே வாழ்ந்துள்ளன. இது சிலர் கோட்பாடு.

வலிமை மட்டுமன்று; சூழ்நிலைக்குத் தக்கபடி தங்களைத் திருத்தியமைக்கும் பண்புடைய உயிரினங்களே வாழ்வு பெறு கின்றன என்பது பெரும்பாலோர் திருத்தக் கோட்பாடு. திருந்திய இக்கொடுவிலங்குக் கோட்பாட்டைத் தகுதி வாழ்வுக் கோட்பாடு (Survival of the Fittest Theory) என்னலாம்.

புற மெய்ம்மையை ஆயும் அளவில் இஃது ஏற்றுக் கொள்ளக்கூடிய கோட்பாடு என்பதில் ஐயமில்லை. ஆனால், வாதம் என்ற அளவில், அக மெய்ம்மையை இது விளக்கவில்லை.

சூழ்நிலைக்கேற்ற தகுதி என்பதென்ன? அஃது எவ்வாறு

ஏற்பட்டது?

உயிரின் அறிவால் தகுதி ஏற்பட்டது என்று கோட்பாடு கூறவில்லை; அதை மறுக்கவுமில்லை. ஆனால், அது பெரும்பாலும் இனத்தின் தனி உயிர்களில் இயல்பாக ஏற்படும் வேறுபாடுகளின் பயனாகத் தற்செயலாக நிகழ்கிறது என்று கூறப்படுகிறது.மாள்வு தவிர்த்துப் பிழைப்பதற்குரிய சிறப்புடைய இனம் பிழைத்து, அதன் மரபு பெருகுகிறது. அச்சிறப்பற்ற