பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

85

உயிர்கள் தாமும் மடிந்து மரபும் அறுகின்றன. இந்நிலையில் தகுதியுடையவை பிழைத்துப் பெருகுகின்றன. தகுதியற்றவை தாமும் மாண்டு மரபும் தேய்வுறுகின்றன.

இங்கே தகுதிவாழ்வு வாதம் தற்செயல் வாதமாகவும் சுழல் வாதமாகவும் காட்சியளிக்கிறது. ஏனெனில், உயிர்களின் வளர்ச்சியில் உயிர்களுக்கு எந்தப் பொறுப்போ, செயலோ இல்லை. இடைக்காலச் சமயங்கள் சிலவற்றின் விதி வாதத்துக்கும் இதற்கும் மிகுதி வேறுபாடு இல்லை. இரண்டாவதாக, தகுதி என்பது பிழைத்திருப்பது. ஆனால், பிழைத்திருப்பதுவோ தகுதியினால். இது தகுதிக்கு விளக்கமாகாது. தகுதி எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் காட்டுவது மட்டுமேயாகும்.

ன்றைய இயல் நூலறிஞர் பெரும்பாலோர் ஆதரவு இதற்கு இருந்தாலும், இது கொடுவிலங்கு வாதத்தின் மேம்பட்ட கோட்பாடன்று என்னலாம்.

இவ்வாதத்தின் இன்னொரு திருத்தம் உயிர்களின் வாழ்வார்வமே தகுதிக்குத் தூண்டுதல் என்று கூறுகிறது.

தற்செயல்வாதம், விதிவாதம், சுழல்வாதம் ஆகிய பிழைகளிலிருந்து இது விடுபட்டுள்ளது. ஆயினும், வாழ்வார்வம் எல்லா உயிர்களுக்கும் ஒன்றுபோல் இருத்தல் இயல்பு. ஒரு சிலவற்றின் தனித் தகுதிக்கு இது விளக்கம் தரவில்லை.

உயிர்நூலார் கூட்டு வாழ்வில் கருத்துச் செலுத்தாம லில்லை. ஆனால், குடும்பம், சமுதாயம் என்ற படிகளில் கருத்துச் செலுத்தாமல், நாடோடிக் கும்பல் வாழ்விலேயே (Gregarious Life) கவனம் செலுத்தியுள்ளனர். இன்றைய மேலை உயிர்நூல் வளர்ச்சியிலும் (Science of Biology) வாழ்வியல் நூல் வளர்ச்சியிலும் (Sociology), மெய் விளக்கத் துறையிலும் (Philosophy) இஃது ஒரு பெருங்குறைபாடு ஆகும்.

வேட்டைக் கோட்பாடு

குடும்பம் வளர்த்துச் சமுதாயம் வளர்க்காத உயிர்களும் உண்டு. பெரும்பாலான பறவைகள் இதற்குச் சான்று. சமுதாயம் வளர்த்துக் குடும்பம் வளர்க்காத உயிரினங்கள் உண்டு. எறும்பினங்கள், தேனீக்கள் முதலியன இதற்குச் சான்றுகள்.