பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

87

ஏற்று அதன் உயிர்க் குறிக்கோளை அழித்து விடுகின்றனர். எப் பகுதியையும் திறம்பட நடித்தும் அப்பண்பு பெறா நடிகர்நிலை அவர்கள் நிலை ஆகின்றது.

இவர்கள் வாதம் கொடுவேட்டை வாதம்; இன்பக் களி யாட்ட வாதம் என்ற இரண்டில் அடங்கும்.

'வாழ், எக்கொடுமையைச் செய்தாவது வெற்றி பெறு! மீன் விற்றுப்பெற்ற பணம் நாறாது! திருடிய பணத்தை அறவழியில் செலவு செய்யலாம், திருடுவதில் திறன் இருந்தால் போதும். எந்தத் தீமை செய்தாலும், திறமையாகச் செய்தால் நல்ல பெயர் எடுத்துவிடலாம்' இஃது இவர்கள் கோட்பாடு.

நாடகத்தில் 'தீயோன்' கோட்பாடு இதுவே. ஆனால், வெளிப்படையாக இக் கோட்பாட்டைப் பரப்புபவர் உலகில் மிகுதியாயில்லாவிட்டாலும், ன அறிஞர் பண்பு பரவா இடங்களிலெல்லாம் இதுவே ஆதிக்கம் நாடுபவர், புகழ் நாடுபவர், செல்வம் நாடுபவர் பணியாக உலகில் உள்ளது.

ன்று

இந்தச் சமுதாயப் பண்பைப் பின்னணியில் வைத்துக் கொண்டுதான் சமயம், அரசியல், அறம் யாவும் ஆராயப்படுகின்றன. இப்பின்னணியில் அமைந்த சமயம், அரசியல், அறங்கள் வகையில் அவை தவறல்ல. வள்ளுவர் கோட்பாட்டை இம்முறையிலேயே மனித இனம் இன்று நோக்குகின்றது. அதன் உயர்வு முற்றிலும் விளக்கமுறாததன் காரணம் இதுவே.

களியாட்ட வாதம்

காடுவேட்டை வாதம்போல், களியாட்ட வாதம் இன்றைய உலகை ஆளவில்லை. அதில் நம்பிக்கை யுடையவர்களும் முன் வகையளவு உலகில் மிகுதி இல்லை. ஆனால், குடும்ப வாழ்வில், சமுதாய வாழ்வில் அது செய்யும் கொடுமைகள் குறைந்ததல்ல.

காதற் போராட்டப் படியில் தமிழர் வளர்த்த உயர் பண்பு உலகெங்கும் ஓரளவு பரவியுள்ளது. இல்லையானால் இன்றைய முதலாளித்துவ நாகரிகம் வெளிப்படையாகக் கோரம்மிக்க நாகரிகமாகவே இருக்கும். நல்ல காலமாக, தமிழகத்தின் முதலாளித்துவக் குழந்தையை வளர்த்த செவிலியான பிரிட்டன்