பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




=

5. தமிழர் வாழ்க்கை மரபு

இயற்கையே பொதுநடத்துக்குரிய பேரம்பலம்; உயிரே

ஆடரங்கு!

காண்பது காலம், காட்சி அறிவு.

இசைக்கின்றது;

அன்பு முழவதிர்கின்றது; இன்பம் யாழ் இசை அவா குழல் மிழற்றுகின்றது.

ஆடும் கால்கள், ஊன்றடி தூக்கடிகள், குடும்பம், சமுதாயம்! பண்பு முத்திரைகள் காட்டும் இருகைகள், ஆண்மை, பெண்மை!

இவற்றுடன் இனம் நின்றாடும் கூத்தாக வாழ்வைத் தமிழன் தன் உள்ளக் கற்பனையில் கண்டான்!

பாரிய, சீரிய, கூத்து இது. பார் அறியாக் கூத்து! வாழ்வு கடந்த மெய்ம்மை, ஆயினும் கலை கடந்த கற்பனை.

இந்த வாழ்வியல் கலைக்கு வழுவிலா இலக்கணம் வகுத்தவர் வள்ளுவர்.

வாழ்வை ஒருபாலாகக் வ

கண்டவர் அவர். அதை ருபாலார்க்கும் பொதுவாகக் கொண்டவர். அதன் வகையை முப்பாலாக வகுத்துரைத்தவர்.

உரைகள் என்னும் மாயத் திரைகள், தமிழ் மரபுத் திரிபென்னும் முகில் படலங்கள், இடையிருட் கால, இக்காலத் தப்பெண்ணங்களின் பனிப்படலங்கள் ஆகியவை கடந்தும் அஃது ஒளி வீசுகின்றது.

வள்ளுவர் காட்சிக்குத் துணைதருவதாய் அமைந்துள்ளது தொல்காப்பியம். தொல்காப்பியத்துக்கு மூல முதலாய் உதவியது தமிழ் மரபுப்பண்பு. இவை இருள் திரைகள் கடந்து ஊடுருவி உண்மை உருவிளக்கம் காண நமக்கு உதவுபவை, மேலை