பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

109

4. குடும்பத்தில் ஆள்பவர் வலியவர்; ஆற்றல் உடையவர்; அறிவுடையவர்; தொலைநோக்குடையவர்; அனுபவமிக்கவர்! ஆனால், குடும்ப ஆட்சியின் நலன் அவர்கள் நலன் அன்று அல்லவேயன்று! அது குடும்ப முழுநலன். அதுமட்டுமன்று, அந்த முழுநலன் பாதுகாக்கப்படும் முறை 'காந்தியம்', ‘டால்ஸ்டாயிஸம்', 'இயேசுயிஸம்', ‘வள்ளுவம்' காக்கும் முறை. ஆற்றல் உடையவர், அறிவுடையவர் தம் அறிவை, ஆற்றலை, தம் நலங்கெடுத்தும் ஆற்றலற்றவர்க்கு, அறிவற்றவர்க்குப் பயன் படுத்துவதன் மூலமும்; அவர்கள் ஆற்றலை, அறிவைப் பெருக்கு வதன் மூலமும் முழுமுதலையும் இனத்தையும் வளர்க்கின்றனர்!

-

குடும்பத்தின் இந்தப் பண்புடைய சமுதாயத்தையோ, இனத்தையோ, நாட்டையோ இன்றுகூட உலகில் காட்ட முடியுமா?

ஆற்றலுடையார் ஆற்றலற்றவர்களை அடக்கிக்கொண்டு அவர்கள் பெயரால் தம் நலன், உரிமை நிலை நாட்டுதல்; அறிவுடையவர் அக்காரணத்தால் அறிவற்றவரை ஆண்டு அவர்கள் மீது சிறப்புரிமையும் நலனும் பெறல்-இவைதாமே இன்று மனித இனமெங்கும் காணும் பண்பு!

அருட்பண்பு சமயத்துக்கே உரியது என்று கொண்டன சில நாகரிகங்கள்! சமயத்துறையில்கூட அதைக் கொண்டில, சில ‘சமய தர்ம’ங்கள்! இன்பத் துறையில் இவ்வருள் கொண்டவரோ, மருந்துக்கும் இல்லை! ஆனால், வள்ளுவர் அறமும் இன்பமும் பொருளும் இந்த அருள் பண்படிப்படையிலே அமைந்தது!

அவர் நூல் இல்லறத்தில் தொடங்கி இன்பத்தில் முடிவுற்றதும், கடவுள் வாழ்த்திலும் வான் சிறப்பிலும் தொடங்கி ஒழுக்கத்து நீத்தார், அறன் வலியுறுத்தலைச் சுட்டிக்காட்டியதும் இதனாலேயே.

விட்டுக்கொடுப்பு, தன்மறுப்பு, இணக்கம், ஒப்புரவு

5.அறிவுடையவர் குடும்பத்தில் அறிவிலாதவர்க்காகச் சில சமயம் தம் நலமும் தம் வாழ்வும் துறக்க நேர்கிறது. நன்றியும் பாராட்டும் புகழும் எதிர்பாராமல் இகழும் இன்னலும் தாங்கிக்கூட நலம் செய்ய நேரிடுகிறது. இத்தன்மறுப்பு