பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

||– –

அப்பாத்துரையம் – 18

ஆளுந் தகுதியற்றவர்களுள் ஆள விரும்புபவர் சிலர். இவர்கள் அறிவுடையோர். ஆனால் தன்னலமுடையோர்; தீயோர். ஏனைய பெரும்பாலோர் தீயோர் அல்லர்; பஞ்சையர்; அறிவற்றவர். இயல்பாக அடிமைகளாக, ஆட்டுக் கூட்டங்களாக. சிந்தனையின்றி இயங்குபவர்.

ஆளுந் தகுதியுடையவர் ஆள விரும்பாவிட்டாலும் வற்புறுத்தப்பட்டால்.நல்லாட்சியே செய்வர்.

வற்புறுத்தப்பட்டு ஆளும் தகுதியுடையோர் ஆளும் னமே உயர் நாகரிக இனம்!

பிளேட்டோ கண்ட குறிக்கோட் குடியரசு இதுவே!

ஆனால், தகுதியுடையவரை வற்புறுத்துவது யார்?

பூனைக்கு மணி கட்டுவது யார்?

பிளேட்டோ இதற்கு விடை கூறவில்லை. ‘தெய்வீகமாக' நடக்கவேண்டிய செயல் இஃது என்று விட்டு விடுகிறார்!

தமிழ்ச் சான்றோர் விளக்கம்

பிளேட்டோ, கண்ட புதிரை விடுவித்தவர் தமிழினத்தவர், வள்ளுவர் இனத்தவர்!

ஆளும் தகுதியுடையவர் தாம் ஒழுக்கத்து நீத்தார்.ஆனால், அவர்கள் பிளேட்டோ குறிக்கொண்ட அன்பிலா அறவோர் அல்லர்; அவர்கள் அந்தணர்.

‘ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு’

ஒழுக்கத்து நீத்தார் பெருமைகளை உலகம் அறியச் சான்றோர் அறநூல்களை உலகம் அறிதல் வேண்டும் என்கிறார், திருவள்ளுவர். ஆனால், உலகம் தம்மை அறியட்டும் என்றும் அவர்கள் வாளா இருப்பவர் அல்லர். ஏனெனில், அவர்கள் அந்தணர்.

‘அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்!'