உலகம் சுற்றுகிறது
173
விரைவை, விசைவேகத்தை நாம் நேரடியாகக் காண்பதில்லை, உணர்வதில்லை. இயற்கை அதன் மீது திரையிட்டு மறைக்கிறது. ஐம்புல உணர்வு அதனை நமக்குக் காட்டுவதில்லை.
பம்பரத்துக்கு இருவகைச் சுழற்சிகள் உண்டு. அது தன்னைத்தானே 'விர்ர்..... விர்ர்' என்று சுற்றிச் சுழல்கிறது. இவ்வாறு சுற்றிச் சுழன்று கொண்டே அது நிலத்தின் மீதும் வட்டமாகச் சுழித்தோடுகிறது. இவ்வியக்கங்களை நாம் அதன் தற்சுழற்சி, வட்டச் சுழற்சி என்னலாம்.
நிலவுலகத்துக்கும் இவ்வாறான இருவகைச் சுழற்சிகள் உண்டு. அது தன்னைத்தானே மணிக்கு 1000 கல் வேகத்தில் சுழல்கிறது. இவ்வாறு தன்னையே ஒரு சுற்றுச் சுற்றிவர அதற்கு 24 மணி நேரம் பிடிக்கிறது. இப்படிச் சுழன்று கொண்டே அது கதிரவனைச் சுற்றி வானவெளியில் ஒரு நெடுநீள வட்டமாகச் சுழித்தோடுகிறது. இச்சுழற்சியின் வேகம் தற்சுழற்சியின் வேகத்தை விடப் பன்மடங்கு பெரிது. ஏனெனில் அது நொடிக்கு 18/2 கல் அதாவது கணத்துக்கு 1,110 கல் அல்லது மணிக்கு 66,600 கல் வீதம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இவ்வேகத்தில் அது கதிரவனை ஒரு தடவை வட்டா காரமாகச் சுற்றிவர ஓர் ஆண்டு, அதாவது ஏறத்தாழ 3654 நாட்கள், திட்ப நுட்பமாகக் கணித்துரைத்தால் 365 நாட்கள், 5 மணி, 56 கணம், 56 நொடிகள் ஆகின்றன.
நிலவுலகம் சுற்றியோடும் இந்நீள் வட்டத்தின் சுற்றளவு 58 கோடியே 38 இலட்சத்து 12 ஆயிரத்து 196 கல் தொலைவு ஆகும். அது நம் கற்பனையின் கற்பனைக்கும் எட்டாத் தொலை, எட்டாத் தொலை என்பதில் ஐயமில்லை. ஏனெனில் நிலவுலகின் சுற்றளவைவிட இது பல்லாயிர மடங்கு பெரிது. 23,000 மடங்குக் கும் மேற்பட்டது.
வேகங் கடந்த வேகத்தில் இந்த இருவகைச் சுழற்சிகளிலும் நிலவுலகம் இரவு பகலாக, ஓய்வொழிவில்லாமல், என்றும், எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டேதானிருக்கின்றது. ஆனால் இங்ஙனம் விசை வேகத்துடன் சுழல்வது நிலவுலகம் மட்டுமன்று. அதனுடன் அதன்மீது வாழும் மனித இனத்த வராகிய நாமும் ஓய்வொழிவில்லாமலே உறங்கும்போதும்,