பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகம் சுற்றுகிறது

185

வாழ்வு. ஆதலால், ‘பறக்கும் குதிரை'யின் கற்பனை; இனவாழ்வு, மொழி வாழ்வு ஆகிய இரண்டின் பொது எல்லைக் கோடாக நின்று நிலவுகின்றது.

நடக்கிறது, ஓடுகிறது!

பாய்கிறது, பறக்கிறது!

மொழித்தளத்தில் இயலுலகில் காணப்படும் வேகங்களைப் படிப்படியாக உயர்வுபடுத்திக் காட்டும் சொற்கள் இவையே.

ஓடுவதில் குதிரையும் பறப்பதில் பறவையுமே உயிரின உச்ச வேகங்களின் உருமாதிரிகளாகியுள்ளன.

இயற்கையாக மொழி செல்லும் எல்லை இது, இது கடந்து மொழி இயல்பாகச் செல்வதில்லை.

இக்காட்சி யுரைகளுடன் கவிஞர், கலைஞர் அமை வதில்லை. அவர்கள் குதிரையும் தேரும் நிலம் பாவாமலே தாவுகின்றன, பாய்கின்றன என்பர். அத்துடன் பறவைகளின் இயல்பை முற்றிலும் குதிரைமீது ஏற்றி, குதிரைகள் பறக்கின்றன என்பர். அவற்றைப் 'பறக்கும் குதிரை' என்றே சிறகுகளுடன் உருவகம் செய்து காண்பர்.

துவே உயிர்க்கலை, காட்சிக்கலையின் எல்லை எனலாம். னனில் மொழி, கலை, அறிவுத்துறை ஆகிய மூன்று தளங்களில் அது நடுத்தளத்தில் தோன்றிய தாயினும், இனத்தின் முழுப்பரப்பாகிய மொழியளாவி, அதன் உச்ச உயர்முகடாகிய அறிவுத்துறையிலும் சென்றெட்டியுள்ளது.

கட்டற்ற கற்பனைக்கலை, இனத்தின் வேர் முதலாகிய மொழியிலோ, அதன் உச்ச உயர் முகடாகிய அறிவுத்துறை யிலோ சென்று பரவாத புறக்கலை, இவ்வெல்லை கடந்தும் கற்பனையை ஓட விடுவதுண்டு.

கற்பனை வேகத்தில் கடுகிச் சென்றன! கற்பனையும் பிற்பட முற்பட்டு முடுகின!

கற்பனை இங்கே கற்பனையின் கற்பனையாகி, நிழலின் நிழல்போலப் பொருண்மையும் சாரமும் அற்றதாகி விடுகிறது. அத்துடன் இதற்குமேல் கற்பனை செல்ல முடியாது என்ற