பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

அப்பாத்துரையம் – 18

இவ்வினிய சொல் தமிழர் வாழ்வில் பயன்படுத்தப்படும் இன்பச்சூழல் மரபுகளில் சில காண்போம்.

மணவாழ்த்து

வாழ்க மணநிறை செல்வர்!’ ‘வளர்க தமிழ் மரபு!’ ‘வெல்க தமிழ்ப்பண்பு!"

இவ்வாறு நாம் புதுமணத் துணைவர்களை வாழ்த்து

கிறோம்.

தாய் தந்தையர்கள் வாழ்த்துகின்றனர். உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர். அன்பின் அழைப்பால், நட்பின் நல்லார்வத் தால், நேசத்தின் பாசத்தால் மணத் துணைவருடன் இணைவுற்ற தோழர் தோழியர் வாழ்த்துகின்றனர்.

மொழி, இனம், நாடு, உலகு, பண்பு என்னும் பல்வகை விரிவுபட்ட தொடர்புகளில் இழைந்த நல்லோரும் பெரியோரும் நல்வாழ்த்துக் கூறுகின்றனர். நல்லெண்ணமும் நல்லறிவும் உடைய உறவோர் யாவருமே வாழ்த்தொலியில் பங்குகொள்கின்றனர்.

சொல்லால் வாழ்த்த முழுவாய்ப்பும் இல்லாத நிலையில் மனத்தால் வாழ்த்துபவர் ஏராளம். அதற்கறிகுறியாகவே அவர்கள் மலர்களைத் தூவுகின்றார்கள்.

வாழ்த்துரையிடையே அறிவுரை வழங்குவர் அறிஞர்,

கலைஞர்!

வாயுரை வாழ்த்தன்றிக் கையுரை வாழ்த்தாகப் பரிசில்கள் வழங்குவோர், அன்புச் சின்னங்களான மாலைகள் அணிவிப் போர் பலர்; பூச்செண்டுகள் அளிப்போர் பலர்.

வாழ்த்துரையை எழுத்து வடிவிலும், இசைப் பாடல் வடிவிலும், வண்ண ஓவிய வடிவிலும் தீட்டும் மரபும் தமிழகம் கண்டுள்ள ஒன்றே!

‘பூவும் மணமும்போலப் பொலிவுறுக! பொன்னும் மணியும் போலப் புகழ்பெறுக!'