உலகம் சுற்றுகிறது
195
மாயங்களாக, மாயமந்திர ஆற்றல்களாகவே நாளடைவில் கருதப்படத் தொடங்கின. இயல் நூல் மரபு முற்றிலும் தொடர்பற்றுப்போன இடைக்காலங்களிலே, அவை பொறிகள் என்பது முற்றிலும் மறக்கப்பட்டு, மாய மந்திர ஆற்றல்களாக, இன்னும் சில சமயம் தெய்விக ஆற்றல்களாக, இயற்கைமீறிய நிகழ்வுகளாக இழி வழக்குற்றன.
தமிழ்ப் பெருங்கதை, சிந்தாமணி காலங்களிலும் அதற்கு முன்னும் தமிழகத்திலும் தமிழகம் சூழ்நிலங்களிலும் இயல்நூல் பெரிதும் வளர்ச்சியுற்று, கலையும் தொழிலும் பெருக்கின என்பதையும் அவை அருநிகழ்வுகளாக நிலவி, பின்னும் படிப்படியாக அவ்வேடுகளின் காலத்துக்குள்ளாகவே வழக்கில் மெல்ல அருகலாகி இறுதியில் மறைவுற்றன என்பதையும் இவை காட்டுகின்றன.
உண்டு.
இவ்வுண்மையை வலியுறுத்தும் வேறு பல செய்திகளும்
கிரேக்கர் ஆரியர் என்று குறிக்கப்படும் இந்து ஐரோப்பிய இனம் சார்ந்தவர்கள். கிட்டத்தட்டச் சிந்து கங்கை வெளிகளில் ஆரியர் புகுந்து பரவிய அதே காலத்திலேயே, அதாவது கி.மு.1500, கி.மு. 1000 வாக்கிலேயே, அவர்கள் கிரீசிலும் சென்று குடியேறினர். கிரேக்க புராண இதிகாசங்கள் பெரும்பாலும் இதற்குப் பின், உருவானவை யேயானாலும், ஆரியர் வருமுன் கிரீசிலும் கிரீட் தீவிலும் வாழ்ந்த பழங்குடி இனத்தவரான ஈஜியரின் கதை மரபுகளும் அவற்றில் விரவியுள்ளன.
கதை.
இவற்றுள் ஒன்றே 'பொறிக் கோட்டம்' (Labyrinth) பற்றிய
பொறிக் கோட்டம் ஒரு மாயப்பூங்கா. அது கிரீட் தீவில் ஆண்ட மன்னன் ஈஜியசுக்குரியது. அதில் புகுந்து அவன் ஆற்றலை அவமதித்துச் சென்ற ஒரு கிரேக்க வீரனை விரைந்து பின்பற்றுவதற்காக, மன்னன் மகன் ஐக்காரஸ் பறக்க உதவும் சிறகுப் பொறி ஒன்றைப் பயன்படுத்துகிறான். கடல்மீது பறக்கும்போது பொறி தற்செயலாக முறிவுற்றதனால் அவன் கடலில் விழுந்து இறக்கிறான்.