பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

அப்பாத்துரையம் – 18

ஒரு

இப்புராணத் துணுக்கின் 'சிறகுப் பொறி'க் கற்பனை முற்றிலும் கட்டற்ற கற்பனையன்று என்பதை இன்றைய அகழ்வாராய்ச்சிகள் காட்டுகின்றன. ஈஜியஸ் உண்மையில் மன்னன் பெயரன்று, ஈஜிய இனத்தவரின் மன்னர் மரபின் பெயரே. அம்மரபினர் அரண்மனை ஓர் அரண்மனை நகரமாகக் காட்சியளித்திருந்தது. கதையில் வரும் பொறிக் கோட்டம் அதன் ஒரு பகுதியே. இவ்வரண்மனை நகர் மண்ணில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் புதையுண்டிருந்த பின் இன்று அகழ்ந்து காணப்பட்டுள்ளது. அந்நகரம் இன்றைய நாகரிக நகர்களுடன் போட்டியிடுமளவில், வியத்தக்க நிலையில் நீர்க்குழாய், இயந்திரக் கிணறு, குளிக்கும் மாடங்கள், விசிறிப்பொறி, மணிப் பொறி ஆகிய வாய்ப்புக்கள் உடையதாய் இருந்ததென ஆராய்ச்சியாளர் கண்டுள்ளனர்.

பிரிட்டன், ஸ்பெயின் முதலிய மேல் கோடி ஐரோப்பியப் பரப்புக்கள் முதலாக, கீழ்க்கோடியில் சீனா'சப்பான், அமெரிக் காவரை பறந்து ஐயாயிர ஆண்டுகளுக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த ஓர் உயர் நாகரிகப் பேரினத்தின் பகுதியே இந்த ஈஜிய நாகரிகம். நாகரிகத்திலும் கலையிலும் இயல் நூலறிவிலும் அது மிகவும் வளர்ச்சியுற்றிருந்த தென்பதை நாம் ஐக்காரஸ் கதையாலும் ஈஜியஸ் அரண்மனை அகழ்வாராய்ச்சி யாலும் மட்டுமன்றி, வேறு பல வகைகளாலும் இன்று அறிகிறோம். நாம் கிரேக்க நாகரிகம், கலை, உரோம நாகரிகம், சிற்பம் என்று போற்றுவதெல்லாம் பெரிதும் இத்தொல்பழம் பேரினத்தின் நாகரிகம், கலை, சிற்பம் ஆகியவற்றின் புத்துருக்கள், மறு பதிப்புக்களே யாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழினம் இந்த உலகத் தொல்பழம் பேரினத்தின் ஒரு பகுதி. ஒரு நடுநாயக உயிர்மையப் பகுதி என்பதும் கூர்ந்து நோக்கத் தக்கது.

பெருங்கதை ஏடுபற்றியும் அதன் ஆசிரியர் பற்றியும், அவ்வேடு இயற்றப்பட்ட மூலத் தாய்மொழி பற்றியும் நமக்கு வந்து எட்டியுள்ள விவரங்களும் இதே உண்மையை வலியுறுத்து கின்றன.

பெருங்கதை மரபின் மூலத்தொகுப்பு ஏழு நூறாயிரம் (7,00,000), பாடல்களும் ஏழுகாண்டங்களும் அடங்கிய மிகப்