பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகம் சுற்றுகிறது

197

பெரிய ஏடு என்று கேள்விப்படுகிறோம். இது தமிழ்க் கம்பரா மாயணத்தைப் போல் எழுபது மடங்கும், சமஸ்கிருத வால்மீகி

ணத்தைப் போல இருபத் தொன்பது மடங்கும் ஆகும்

என்பது நினைவில் கொள்ளத் தக்கது.

பெருங்கதை என்ற பெயர் கீழ்த்திசையில் நீடித்த புகழ் மரபு நாட்டியுள்ளது. சமஸ்கிருதத்தில் மகா பாரதத்தின் பெயர் (பெரிய பரத குடியினர் வரலாறு), கம்பர் இராமாயணத்துக்குத் தந்த ‘மாக்கதை’ என்ற பெயர் ஆகியவையும், சேக்கிழார் பெரிய புராணம் என்ற பெயரும் இப்புகழ் மரபு புதுப்பிக்க வந்தனவாகத் தோன்றுகின்றன. தமிழ் முதற்சங்க ஏட்டின் பெயராகக் காணப்படும் மாபுராணம் என்பதும் இதே பொருள் தொடர்பு கொண்டுள்ளது- பெருங்கதையுடன் அதன் தொடர்பு இன்னது என்று இன்று அறியுமாறில்லை. அது ஓர் இலக்கண ஏடு என்று இடைக்காலத் தமிழ் மரபு கருதினும், அது ஒரு காவியமாகவே இருந்திருத்தல் கூடாததன்று என்னலாம்.

பெருங்கதைக்குரிய மூலத்தாய் மொழி பேய் மொழி எனக் குறிக்கப்பட்டுள்ளது. கதை மரபு அதைப் பேய்கள் பேசிய மொழி என்று தான் கூறுகிறது. ஆனால் அது விந்தியமலைப் பகுதியில் ஒரு காலத்தில் நிலவிய ஏதோ ஒரு தாய் மொழி என்றும், ஏதோ ஒரு மலைநாட்டுப் பழங்குடி மக்களின் தாய்மொழியாய் இருத்தல் கூடுமென்றும் தான் ஆராய்ச்சியாளர் பொதுவே கருத்துரைத் துள்ளனர். எனினும் மொழி எது என்பதுபற்றி ஒருமித்த முடிபு இல்லை. வரருசி என்ற பழைய பிராகிருத இலக்கண நூலார் பிராகிருதச் சிதைவு வகை ஒன்றைப் பேய்மொழி எனக் குறிப்பிட்டுள்ளனர். இதை எடுத்துக் காட்டிப் பேய் மொழி ஒரு பிராகிருதச் சிதைவே என்பர் பல ஆராய்ச்சியாளர். ஆனால் பேய்மொழி என்ற வன்மை வாய்ந்த பழிப்பெயர் காண அது ஆரியரல்லாதார் மொழி ஆரியருக்குப் பணிந்தடங்காத வன்மொழி என்று கூறவே இடமுண்டு. இன்றும் விந்தியமலைப் பகுதிகளில் பேசப்படும் பண்படாத் திராவிட மொழிகளாகிய கோண்டு, கூயி முதலிய மொழிகளில் அது ஒன்றாயிருக்கலாம், அல்லது தெலுங்கின் ஒரு வகையாகவோ, பழந்தமிழராகிய முதற் சங்க (மாபுராணகால)த் தமிழ் மொழியாகவோ கூட இருத்தல் கூடும் என்னலாம்.