பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

5

'மணியும் ஒலியும் போல, முத்தும் பவளமும் போல, யாழும் இசையும் போல இணைவுற்று வாழ்க!

'வானும் மதியும் போல, மாலைப்போதும் தென்றலும் போல மகிழ்வுற்று, குதலைவாய் மழலையாடும் மதலைச் செல்வத்தில் திளைத்தாடுக!'

'தமிழும் இனிமையும்போல, முத்தமிழும் முழுநிறை இன்பமும்போல, காவியமும் கவினும் போலக் கலந்து, உருவும் திருவும் இசையும் மிலைக! உடலோடு உயிர், முகிலோடு மின்னல், குடியோடு கோன் என ஒன்றுபட்டுக் குறைவற்ற நீண்ட வாழ்வு பெறுக!”

இத்தகைய வாழ்த்துகளைத் தமிழகத்தில் ஒவ்வொரு நம்பியின் மண விழாவின்போதும், ஒவ்வொரு நங்கையின் மன்றல் வேளையின் போதும் கேட்கிறோம்.

பொங்கல் வாழ்த்தொலி

ரு

தமிழர் குடும்ப வாழ்வின் மலர்ச்சி மணவிழா. அவர்கள் ன வாழ்வின் மலர்ச்சி தமிழ்விழா, பொங்கல்விழா. மணவிழா குடும்பத்தில் தலைமுறைதோறும் புதுமையூட்டுகிறது.திருமண விழா அதாவது திருந்திய மணவிழா தமிழர் பண்டு கண்டு, இன்று திரும்பவும் கண்டுணர்ந்து புதுப்பிக்கும் புதுவிழா! அது வாழ்வில் ஆக்கமும் பெருக்கமும் அளிக்கிறது.

குடும்பத்திலும் இனத்திலும், இவற்றின் பொங்கல் பெருக்க வளமான சமுதாய, சமய, பொருளியல், கலை வாழ்வுகளிலும் ஆண்டுதோறும் புதுமை யூட்டுவது பொங்கல் விழா. அதுவே தலைமுறைதோறும், ஊழிதோறும் தமிழ் நின்று நிலவ உதவுகிறது. தமிழுடன் தமிழ்த் திருவள்ளுவரின் தெய்வத் தமிழ்ப் பண்பு மங்காது நீடித்து நிலவவும் அது வழிவகுக்கின்றது.தமிழில் டை விடாத புத்தார்வமும் எழிலார்ந்த புதுமலர்ச்சியும் ஊட்டுவது அது.

'வாழ்க மணவிழா, வளர்க தமிழ்' என்று மணவிழாவில் பொங்கல் வாழ்த்தொலி எழுகின்றது.

'பொங்கலோ பொங்கல்! பால் பொங்குக!' என்று தமிழ் விழாவில் பொங்கல் வாழ்த்தொலி முழங்குகின்றது.