(206
அப்பாத்துரையம் – 18
விரைவு, வேகம், விசை, விசை வேகம் எனச் சுழற்சியின் வேகத்தை இயற்கையெல்லை கடந்து பெருக்குவதற்கும் குதிரை அத்துடன் முன்பின்னாகக் குதித்தாடுவதற்கும் உரிய அமைப்புக் கள் விசைப் பொறியில் திட்டமிட்டே புனையப்பட்டுள்ளன.
சுழற்சியின் விசைப் பெருக்கம் உண்டு பண்ணும் வகையில் சாணைப்பொறி, தையல்பொறி, மிதிவண்டி ஆகியயாவும் கிட்டத்தட்ட ஒரே முறையைப் பின் பற்றுகின்றன. சுழற்றுபவன் ஒரு வட்டத்தைச் சுழற்றுகிறான். அதன் சுற்று வட்டத்துடன் மற்றச் சிறு வட்டுகளின் சுற்றுவிட்டங்களோ, மைய அச்சோ பொருத்தப்படுகின்றன. பெரிதான சுற்று வட்டம் ஒரு தடவை சுற்று வதற்குள் சிறிதான வட்டம் பல தடவை, இன்னும் சிறிதான மையம் பின்னும் பலதடவை சுற்றிவிடுகிறது. சுற்று வட்டங்களின் எண்ணிக்கை பெருகுந்தோறும் விசை ஒன்று பத்து நூறாகப் பெருகும். கொள்கையளவில் இவ்வாறு இம்முறையில் எல்லை யற்ற விசைப் பெருக்கம் ஏற்படக் கூடுமாயினும், செயலளவில் இதற்கு மிகக் குறுகிய எல்லைதான் உண்டு. ஏனெனில் பொறி விசை பெருக்கத் தான் வழி வகுக்கிறதேயன்றி, சுற்றுபவன் ஆற்றல் பெருக வழி செய்யவில்லை. இக்காரணத்தாலேயே சாணை, தையற்பொறி, மிதிவண்டி ஆகியவற்றை வாய்ப்பான விசைப்பொறிகள் என்று மட்டும் கூறுகிறோம். இயந்திரம் என்று கூறுவதில்லை.
பறக்கும் குதிரை விசைப் பொறியாயினும் எல்லையற்ற வேகம் மட்டுமன்றி, எல்லையற்ற ஆற்றலும் உடையது.ஏனெனில் அது சுழற்சியிலிருந்து சுழற்சி பெருக்கவில்லை. சுழற்சியுள் சுழற்சி அமைத்துச் சுழற்சிகளைப் பெருக்குகிறது. எல்லாச் சுழற்சிப் படிகளையும் சுழற்றுபவன் ஒருவனல்ல, ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொருவனாகப் பலர் சுழற்றுகின்றனர். சுழற்சியுள் சுழற்சியின் படிகள் பெருகும்தோறும் விசை பெருகுகிறது. சுழற்றுபவர் தொகையும் ஆற்றலும் அதற்கிசையப் பெருக வழியுண்டு.
தமிழக விழாக்கால உலாவுருக்கள் அடியில் முன் பின்னாக இரண்டு நீண்ட தண்டயங்கள் பிணிக்கப்பட்டு தூக்கு கலங்களாகக் கொண்டு செல்லப்படுவன. பறக்கும் குதிரை மற்ற உலாவுருக்களைப் பார்க்க எத்தனையோ மடங்கு பெரியது, பளுவுடையது. அதன் சுழலாட்ட வேகம் மட்டுமன்றி, கொண்டு