(208
அப்பாத்துரையம் – 18
என்று அவர்கள் எழுப்பும் போர்க்குரல் தெருவெங்கும் கூட்டங் களை அதிரச் செய்து வானில் ஒலி எதிரொலியாக முழங்கும்.
ஒன்பதாம் நாள் ஆட்டபாட்டம் இந்த எட்டாம் நாளில் குறைந்ததல்ல, பன்மடங்கு பெரிது. ஏனென்றால் பாரிய பறக்கும் குதிரையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் முன் பின்னாக ஓடியாடு வதுடன் நிற்பதில்லை. அதனுடனே சுற்றிச் சுழன்று பறக்கும் குதிரையைச் சுழலவைத்தபடியே முன்பின்னாக, பின்முன்னாக ஓடியாடிக் குதிப்பர் - வான்பிளக்கப் போர்க் குரல்கள் எழுப்பி முகில்களுடன் போருக்கெழுபவர்போல ஆர்ப்பரிப்பர்.
தண்டயங்களில் தூக்குபவர் முதலிலேயே தோள் கொடுத்துவிடுவதில்லை. டை ஓய்வு நேரந்தவிர, அதைப் பெரும்பாலும் தோள்மீது சுமப்பதேயில்லை. முதலில் அதை நிலமீது அமைந்துள்ள முட்டளவுயரமான குத்துக் கல் மீது வைத்து, பேராரவாரத்துடனே தொங்கவிட்ட கைப்பூட்டுக் களிலேயே ஏந்துவர். இந்த நிலையில் உலாவுருவுடன் பம்பரம் போலப் பரபரவென்று சுற்றி, உரு உச்ச விசையில் சுழலும் சமயத்தில் திடுமென ஒரே கூக்குரலிட்ட வண்ணம் தொங்க விட்ட கைகளைத் தோளளவுக்கு உயர்த்துவர். பம்பரமாகச் சுழன்ற வண்ணமே குதிரை வீடுகளின் மோட்டளவு உயரத்துக்கு உயர்வுறும். சுற்றிய வேகம் நிற்காமலே அது அவ்வுயரத்தில் சுழன்று கொண்டிருக்கும்.
தோளளவாகத் தூக்கி முன்பின்னாகச் சிலநேரம் ஓடிய பின், வீரர் உலாவுருவை மீட்டும் முன்போல் தாழ்த்திச் சுழற்சி உண்டு பண்ணுவர். மீட்டும் தண்டயங்களை உயர்த்துவர்.ஆனால் இத்தடவை அதைத் தோள் அளவுடன் நிறுத்தாமல், தோள் அளவிலும் சுற்றிச் சுழன்று உலாவுருவுக்கு மேலும் விசையூட்டிய பின் கைகளைத் தலைக்கு மேல் உச்ச அளவுக்கு உயர்த்திப் பிடித்து அந்நிலையிலே மீண்டும் சுற்றிச் சுழல்வர், ஓடியாடுவர், முன் பின்னாக ஓட்டம் தொடங்குவர்.
தூக்குபவர் தரும் இந்தச் சுழற்சியே பறக்கும் குதிரையைச் சுழன்று மேலெழுந்து பறப்பது போன்ற மாயத் தோற்றம் தரப் போதியது. ஏனெனில், பறக்கும் குதிரையும் அதன்மீது இறுகப்