உலகம் சுற்றுகிறது
211
பெயர் பெற்றுள்ளது. இந்த இடத்தில் போர்கள் பல நடைபெற்றுள்ளன என்பதை வரலாற்றில் காண்கிறோம்.போரில் வீழ்ந்த ஒரு படைத்தலைவனுக்கு வீரக்கோயிலும் வீரபூசையும் இன்றளவும் பேணப்படுகின்றன. ஊரில் எங்கும் அணிமை வரை காணப்பட்ட, இப்போதும் அகழ்ந்து காணப் படும் குண்டுகளும், மலைப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பீரங்கிகளும் இப்போர்களுக்கு இன்றும் சான்று பகர்கின்றன.
உ
பழம்போர்கள், வேட்டை, கடும்உழைப்பு ஆகியவை இன்று வரை ஊர்மக்களை உரமிக்க உடல் வாய்ந்தவர்களாகவும் போர்க் குணமுடையவர்களாகவும் ஆக்கிப் படைத்துள்ளது. ஒன்பதாம் நாள் விழாவின் உருவும் இயல்பும், எட்டாம் நாள் விழாவின் பண்பும், இச் சூழல்களுக்கும் பண்புக்கும் இசைந்தவை யாகும்.
தமிழகக் கோயில்களுக்கும் விழாக்களுக்கும், தமிழக வரலாற்றுக்கும் அரசியல் வாழ்வுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. பேரூர், சிற்றூர்க் கோயில்கள் எல்லாவற்றிலுமே பத்து நாள் விழாக்கள் பெரும்பாலும் உண்டு- இவை உண்மையில் ஒவ்வோர் அரசரின் முக்கிய உள்நாட்டு வெற்றிகளையும், கடல்கடந்த வெற்றிகளையும், அவ்வரசன் பிறந்த நாளையும் கொண்டாடுபவையாகவே பெரிதும் அமைந்துள்ளன. ஏழுநாள் இறைவன் எழுச்சியாகவும், எட்டாம் நாள் மன்னன் போர் எழுச்சி குறிப்பதாகவும், ஒன்பதாம் நாள் மன்னன் வெற்றிக் கொண்டாட்டம் அல்லது வெற்றியுலாவாகவும், பத்தாம் நாள் மன்னன் பிறந்த நாள் வாழ்த்து நாளாகவும் (நாள் மங்கல மாகவும்) அமைந்துள்ளன.
ஒன்பதாம் நாள் விழாப் பொதுவாக எங்கும் தேர் விழாவாக இருப்பதன் காரணம் இதுவே. அது மன்னன் வெற்றி உலா அல்லது ஊர்வலம் குறிப்பதாகும்.
ஆரல்வாய் மொழியில் கோயில்கொண்ட இறைவர், இறைவி பெயர்கள் மதுரை கோயில் கொண்ட மீனாட்சி சொக்கலிங்கர் பெயர்களே. கோயில் மரபுகளும் விழா மரபுகளும் பெரிதும் இதற்கிசைந்தவையே, மதுரையைப் பின் பற்றியவையே. ஆனால் கோயில் மரபுகளில் சிலவும் விழாவின் மரபுகளில்