பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகம் சுற்றுகிறது

225

(நாஸதோ வித்ய தே பாவ: நாபாவே வித்யதே ஸத: உபயோரபி த்ருஷ்டோந்தஸ்து அநயோஸ் தத்வர்சிபி)

இவ்விடங்களில் வாதமயக்கம், அறிவு மருட்சி ஆகியவை உண்டாவதற்குரிய காரணம்கூட மொழி மாயமே. மழையில்லை என்பவன் இன்மை காண்பதும், ஒளிகாணாதவன் இருள் காண்பதும் உண்மையில் இன்மைக் காட்சியல்ல, அன்மைக் காட்சியே.

இடைக்காலப் புத்த சமண, வேதாந்த சித்தாந்த ஏடுகளில் இல்பொருள் சான்றுகளாகக் குறிக்கப்படும் முயற்கொம்பு, மலடிமகள், வானத்தாமரை ஆகியவையும் உண்மையில் இல் பொருள்களல்ல, அல்பொருள்களே.

ஆம். இருள் என்பதும் இதுபோன்றதொரு மொழி மாயமே. அது ஒளியின் எதிர்பண்புமன்று, இன்மையுமன்று - அன்மை யே! அன்மை என்பது மாறுபட்ட உண்மை, இன்மையன்று.

இருள் ஒளிக்கு எதிர்பண்பு என்ற அறியாப் பொது மக்கள் கருத்துக்கூட அவ்வளவு படுதவறானதன்று, அது ஒளியின் ன்மை என்ற அறிவுடைய அறிஞர் முடியே அதனினும் தவறானது. ஏனெனில் அது எதிர் பண்பல்லாவிட்டாலும், ஓரளவு மாறுபட்ட உண்மையே - காட்சிக்குரிய ஒளியின் அல்லது ஒளிக்கூறின் அன்மை, காட்சிப் படாத ஒளிக்கூறுகளின் உண்மையே அது.

ஒளி, இருள் மட்டுமல்ல எதிரிணை சொற்கள்!

ஒளி, நிழல் இவையும் எதிரிணை சொற்களே!

ஒரே அகல்பேரொளி அல்லது இருவேறு ஒளிகளின் கதிர்கள் ஒரு கோல் அல்லது கம்பத்தைக் கடந்து செல்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அப்போது கோலின் அகலத்தை அடிவரை (base) ஆகக்கொண்ட ஒரு முக்கோணம் செறிநிழல் (umbra) ஆகவும், அதன் இருபுறமும் கோலின் ஓரங்களைக் கூர் மையம் (Apex) ஆகக்கொண்ட இரு முக்கோணங்கள் தளர்நிழல் அல்லது ஒளிநிழல் (Penumbra) ஆகவும் மற்றப் பகுதிகளே ஒளிப் பரப்பாகவும் இயல்வது காணலாம்.