பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

அப்பாத்துரையம் – 18

எங்கும் 'அஞ்சல் தமிழ்' பரவுகின்றது, 'அஞ்சல்! அஞ்சல்! அருந்தமிழ்ப் பொங்கல், பொங்கல்!' என்ற வாழ்த்தொலி வளர்கின்றது!

எங்கும் ‘பால் பொங்கிற்றா? பொங்குக பால்! மலர்க வண்டமிழ் வாழ்வு!' என்பதே தமிழ் தமிழுடன் அளவளாவும் பண்புமொழி ஆகின்றது!

மும்மை வாழ்த்தொலி முழக்கம்

தமிழ்க் குடும்பச் சூழல்களிலும், தமிழகத் தெரு வீதிகளிலும் பொங்கிப் பொலிவுறும் இத் தமிழ் வாழ்த்தொலிகள் தமிழ்ச் சமுதாயமெங்கணும், தமிழ் வழங்கும் உலகெங்கணும் பரவி வருகின்றன. தமிழ் ஊர்தி, தொடர் ஊர்தி களிலும், தமிழக ஊர்தி நிலையங்களிலும், தமிழ்க் கடல் தவழும் தமிழகக் கலங் களிலும், தமிழக வானூர்திகளிலும் உலாவத் தொடங்கியுள்ளன. தமிழர் இருவர் சந்திக்கும் வாய்ப்புடைய பொது இடங்கள் தோறும் அவை தமிழ் அலை எழுப்புகின்றன.

குடும்பத்தின் வாழ்வுக்குரிய விழாவான திருமண விழாவிலும், இனத்தின் புது மலர்ச்சி விழாவான பொங்கல் விழாவிலும் தமிழ்மொழி பொங்கல் வாழ்வுறத் தொடங்கி விட்டது. தமிழ்க் கல்லூரி பல்கலைக் கழகங்களிலும் தமிழக ஆட்சி மன்றங்களிலும், தமிழ் அறங்கூறவையங்களிலும், தமிழக ஆட்சியரங்கங்களிலும் வண்டமிழ் மலர்ந்து தேன்சுவை கொழிக்கும் நாள் தொலைவிலில்லை. நம் மைந்தர் நங்கையர் வாழ்வின் ஒவ்வோர் ஓரையும்' ஒவ்வொரு மூச்சும் வினாடியும் அதை நம்மை நோக்கி அணித்தாகக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன; கொண்டு வருகின்றன என்னலாம்!

ஆங்கிலத்தின் அந்திவானம் அதோ சாய்கின்றது, அழகுறச் சாய்ந்து பிறையொளி பூக்கின்றது!

இந்தியின் பகலொளி அதோ மாலை வெள்ளியாய் மினுமினுக்கின்றது! அதுவே தமிழ்ப் பகலவன் வரவு கூறும் காலை வெள்ளியாய்க் கீழ்த்திசையில் குலவ இருக்கின்றது!