பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகம் சுற்றுகிறது

(233

அறிவின் அவா ஆர்வம்) ஆகியவை பெறுதல் போல, காதலிக்கப் பட்டவரால் தாமும் காதலிக்கப்பெற்ற காதலர் அடையும் இன்பமும் இன்பம் கடந்த புத்தின்பம், அது கடந்த எல்லையற்ற இன்ப அவா வளம், இன்பம் பெறா நிலையின் நினைவாகிய புதுமலர்ச்சியின்பம், எல்லையற்ற இன்ப எதிரலை இன்ப வளம் ஆகியவற்றால் பொங்கல்நிறை இன்பமாகிறது.

இன்பப்பாலில் அறிவறியாமை பற்றிய குறட்பாத் தரும் மொத்தப் பொருள் வளம் இதுவே.

அறிவலையின் அறியாமைக்கூறே மயக்கம், மருட்சி, மாறாட்டங்கள். அறிவை உயிரறிவாக்கி வளர்ச்சி தூண்டுபவை இவையே. அத்துடன் அவையே அறிவைத் தூண்டி இயக்கிய பின் மாயம், மருட்கை, தெருட்சியாகி, மெய்யறிவாகிய புத்தறிவுக்கு வழி வகுக்கின்றன. ஆனால் அறிவுப் படியும் மெய்யறிவுப் படியும் கடந்த பின்னும் அறிவுக்கு முற்பட்ட அறியாமை அல்லது அறிவுக்குறை பற்றிய மறுசிந்தனை மீண்டும் புதிய அறிவறியாமை அலைகளைத் தூண்ட முடியாதென்றில்லை.

இயல் நூலின் முற்போக்கும் நிலவுலகச் சுழற்சியும் இவற்றுக்குச் சான்றுகள் தருகின்றன.

டைக்

தற்கால இயல் நூல் வளர்ச்சி முற்றிலும் அணிமைத் தற்காலத்துக்கேயுரியதன்று. அதன் வேர்த் தடங்களை இ காலங்களில் காணமுடியும். அதற்கு உரம் தந்த வாழ்வு பண்டைக்கால இயல் நூல் வாழ்வே. அழிந்து பட்ட அவ் வாழ்வின் மக்கிய உயிர்கூறுகளே புதிய வளர்ச்சிக்கு உரமாய் உதவின. ஆனால் ஆனால் இவ்வேர்த்தடமும் உரமுதல் வாழ்வும் காணாமல் தற்கால இயல்நூ வளர்ச்சி முழுவதும் தற்காலத்துக்கேயுரியதென்று கருது பவர்கூட, அவ்வியல் நூல் வளர்ச்சிக்குத் தூண்டுதலான சிந்தனைகளை முற்காலங்களில் காணாதிருக்க முடியாது.

பண்டைக் கிரேக்கரும், அவர்கட்கு முற்பட்ட நடு நிலக் கடல் நாகரிக இனங்களும் தமிழக மக்களும் பிற கீழ்திசை இனத்தவரும் இயற்கையின் மூலப்பொருள் பற்றிச் சிந்தித்திருந் தனர். கிரேக்க அறிஞரின் இத்தகைய சிந்தனைகளும், புத்தர் காலத்துக்கு முற்பட்ட கீழ்திசையறிஞர் சிந்தனைகளும் கிரேக்க