(234)
||– –
அப்பாத்துரையம் – 18
நாட்டவர் அறிவிலக்கியத்திலும் கீழ்திசை உபநிடதங்களிலும் நமக்குச் சேமித்துத் தரப்பெற்றுள்ளன. மிகத் தொல்பழங் காலத்திலிருந்தே இச்சிந்தனைகளின் பயனாக அறிஞர் கண்ட கோட் பாடே பின்னாட்களில் பொருள் மூலங்கள் அல்லது பூதங்கள் என்று தொகுத்துரைக்கப் பட்டன.
நிலம்,நீர், அனல், காற்று என்ற நான்கு இயற் பொருள் களையுமே மூலப் பொருள்களாகக் கொண்டனர் கிரேக்கரும் அவர்களைப் பின்பற்றிய மேலைநாட்டாரும். ஆனால் கீழ்திசை யாளர் சிந்தனை, இவற்றுடன் வான் என்பதனைச் சேர்த்து ஐந்தாகக் கொண்டது.
திருமூலர் பாடலில் ‘பார்முதல் பூதம்' என்று குறிக்கப் பட்டது இந்த ஐம்பூதங்களையே.
ஏதோ தொல்பழங்காலத்தில் எழுந்த ஒரு சிந்தனை யூழியின் பயனாகத் தொகுக்கப்பட்ட இந்தக் கோட்பாட்டை, இடையிருட் காலத்துக்கு முற்பட்டே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகம் உயிர்ப்பற்ற, வளர்ச்சியற்ற, வாதக் கோட்பாடாகக் கொண்டு இயங்கி வந்தது. ஆனால் மீட்டும் இந்தியா, அராபியா ஆகிய பரப்புக்களிலிருந்து புதிய இயல் நூல் மரபு எழுந்து, 16-ஆம் நூற்றாண்டின் பின், மேலை ஐரோப்பாவில் புது மலர்ச்சியுற்ற போது, இயலுலகின் மூலமுதற் பொருளாராய்ச்சி மீண்டும் புதிய அடிப்படைமீது தொடங்கிற்று.
பழைய ஐம்பூதக் கோட்பாட்டிலிருந்து இது தொடர வில்லை. அக்கோட்பாடு ஒரு சிந்தனை முடிபு என்ற எண்ணமே அற்ற நிலையில், அதை ஓர் அறியா நம்பிக்கையாக ஒதுக்கி விட்டு, மூலப் பொருள்,தோட்டம், புத்தம் புதிதாகப் புதிய
அடிப்படையிலிருந்து தொடங்கிற்று.
தற்கால இயல் நூலார் நூற்றுக்கு மேற்பட்ட முதற் பொருள் (Elements)களை நாடி ஆய்ந்து கணித்துள்ளனர். அவற்றின் பட்டியலும், அவற்றின் பண்பாராய்வும் விரிவடைந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில் திருமூலர் திரு மந்திரத்திலோ வேறு கீழ்திசை மேல்திசை ஏடுகளிலோ ஐம்பூதம், நாற்பூதம் பற்றிய குறிப்புக்களை இயல்நூலார் அல்லது இயல் நூல் மாணவர் காண நேர்ந்தால், அப்பழங்கால நம்பிக்கைகளை