பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

9

தமிழ் இளநிலா, தமிழின் இன்பத் தென்றல், தமிழின் அழகு மணம், அமுத ஒளி எங்கணும் இன்னிசை பரப்பத் தொடங்கி விட்டது!

பொது மொழிகளாகத் தற்காலிகமாக நிலவி வந்துள்ள ஆங்கிலம், இந்தி ஆகியவற்றையே வாயில் வரப்புகளாக, தூம்பு மடைகளாக, கால்வாய்களாகக் கொண்டு, தமிழக ஏரி வெள்ளம் இந்திய மாநில வாழ்வு, பரந்த அகலுலக வாழ்வு என்னும் பன்மொழிக் கழனிகளில் சென்று பரவ இருக்கின்றது. விரைந்து சென்று எங்கணும் பரவும்! உலகும் இந்தியாவும் தமிழகத்தின் விரிவாக, தமிழகமே உலகின், இந்தியாவின் செறிவாக; உலகும் இந்தியாவும் பசுஞ்சோலை, பசுங்கழனிகளாக, தமிழகம் அவற்றின் நாற்றுப் பண்ணையாக நின்று நிலவும் நாள் தொலைவிலில்லை!

அழகு மலரை நாம் இங்கே பேண, அதன் ஆர்வ மணம் அங்கே உலகெங்கும் பரவ இருக்கின்றது!

இனிய யாழை நாம் இங்கே மீட்ட, அதன் எழிலார்ந்த இன்னிசை அங்கே நாலா பக்கமும் நுண்ணலை பரப்ப இருக்கின்றது!

வாழ்க தமிழ், வளர்க தமிழ் ஆட்சி, பொங்குக பொன்னார் தமிழகம்!

தமிழகப் பண்பு பொங்கித் தண்க பொங்கித் தண்கடல் வளாக முழுவதும்

வழிந்தோடுக!

முத்தமிழ் முச்சங்க முழக்கம்

இமயங் கண்ட தமிழகம், ஈழம் கொண்ட தமிழகம்! கங்கைகொண்ட தமிழகம், கடாரம் கடந்த தமிழகம்! உரோமகத்தின் செல்வம் திறைகொண்ட தமிழகம்! வாணிகம் கண்ட தமிழகம்! வண்தொழில் புகழ்கொண்ட தமிழகம்!

இத்தகைய தமிழகம் அன்று வாழ்ந்த பெருவாழ்வு இன்று மீண்டும் பொங்க இருக்கின்றது! அன்று மலர்ந்த தமிழ்ப் பண்பு, இடைக்கால நள்ளிராப் போதில் கூம்பி, இன்று மீண்டும் மறுமலர்ச்சியடைய இருக்கின்றது! மறுமலர்ச்சியடைந்து வருகின்றது!