(246
அப்பாத்துரையம் – 18
கோளினங்களுக்கு உரிய தனிச் சிறப்பான பொதுப் பண்புகள் இன்று கதிரவனைச் சுற்றியோடுதல், கதிரவன் ஈர்ப்புக்கு ஆளாதல் ஆகியவை என்று கருதப்படுகின்றன. தமக்கென ஒளியின்றி, கதிரவனொளியை நிழலிட்டுக் காட்டு தலும் பொதுப் பண்பேயாகும்.
கோளினங்களுக்குரிய மேலை மொழிப் பெயர் (Planet) இப்பொதுப் பண்புகளுள் எதனையும் காட்ட வில்லை. ஆனால் முதலில் காணப்பட்ட மூலப் பொதுப் பண்பான ஒழுங்கு மீறிய தனியியக்கத்தை (உலவுவது என்ற பொருளை) அது குறிக்கின்றது. விண்மீன் என்பதற்குரிய மேலை மொழிகளின் சொல் (Star) இதற்கெதிராக, மின்னுவது அல்லது இமைப்பது என்னும் பொருளுடையது.
கோளினங்களின் பொதுப்பண்பு குறித்த வகையில், கீழை மொழிகள் - சிறப்பாகத் தமிழ் மொழி இயல் நூல் வளர்ச்சி நோக்கிய ஒரு பெரும் படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது. சமஸ்கிருதத்தில் இதற்குரிய சொல் (க்ரஹம்) ஈர்க்கப்படுவது என்ற பொருளையும், தமிழில் (கோள்) அது போலவே ஈர்த்துக் கொள்ளப்படுவது என்ற பொருளையோ ஒளியைத் தனதாக வன்றிக் கதிரவனிட மிருந்து பெற்றுக் கொள்வது என்ற பொருளையோ சுட்டுவது ஆகும். இதற்கெதிராக, விண்மீன் என்பதற்குச் சமஸ்கிருதத்தில் பழைய சொல் (தாரா) மேலைச் சொல்லின் (Star) திரிபாகவே இருந்தாலும், புதுச்சொல் (நட்சத்ரம்) இயங்காதது என்ற பொருளும், தமிழின் அதற்குரிய சொல் (மீன்) மின்னுவது என்ற பொருளும் தருவன ஆகும்.
ரண்டாவதாக, பழைய கோளினப்பட்டியலிலுள்ள பெயர்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற ஐந்தும் நம் கால இயல்நூலின் படியும் கோளினங் களாகவே நிலை பெறுகின்றன.
தவிர, பழைய கோளினங்களான ஒன்பதில் இல் பொரு ளான இராகு கேதுக்கள் இரண்டும், கதிரவனும், துணை கோளான திங்களும் எடுபட்டு நான்கு குறைந்தாலும், அதனுடன் நம் நிலவுலகம், சேண்மம், வருணம், அளகை ஆகிய நான்கு சேர்க்கப்பட்டு, பழைய பட்டியலின் தொகையாகிய ஒன்பது நிரப்பப்பட்டுள்ளது.