பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம் – 18

குழந்தைப்போதில் கூடிக் குலவி மகிழ்ந்த விளையாட்டு நினைவு முதிராப் பருவமுறிவு கடந்து பருவத்தில் பாசக் கனவார்வமாக வளர்ந்துள்ளது. நேச நனவார்வமாகப் பொங்க இருக்கின்றது! கனவின் அலைகளினூடாக நனவு தவழ்கின்றது!

பழைமையின் புகைமுகிலிடையே அதோ நின்றொளி பூக்கின்றது, வடிம்பலம்ப நின்ற பாண்டியன் பொன்னார் புகழ்! தொன்முகிலைப் பொன் முகிலாக்கிப் பொன் கதிரொளி வீசுகின்றது!

அதோ, சோழன் கரிகாலன் கையில் செண்டுடன் மயத்தின் தருக்கடக்கி, அதன் நெற்றித்தடத்தில் தான் பொறித்த புலிக்கொடி காட்டிக் கொக்கரிக்கிறான்! அவந்தி அரசரும், ஈழத்தரசரும், மாளவ மன்னரும் அவன் கால்மலரைப் பெருமையுடன் தம் தலைமீதணிந்து, சிந்து கங்கைவெளி நோக்கி இறுமாந்து செம்மாப்புறுகின்றனர்! அதோ, அதே இமயத்தின் மற்றொருபால், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் புலிக்கொடியுடன் போட்டி யிட்டுத் தன் கயற் கொடியையும் இமயத்தின் புருவத்தில் பொறிக்கிறான்!

கரிகாலன், நெடுஞ்செழியன் ஆகிய இருவரையும் கையமர்த்தி, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இருவர் சின்னங்களுக்கும் அப்பாற் சென்று, இருவர் சின்னங்களையும் கண்டு நகைத்த வண்ணம், தன் வானளாவும் விற்கொடி பதிக்கிறான்!

அவனருகே அவன் கான்முளை, சேரன் செங்குட்டுவன் தந்தை தோள்களிலும் பூரித்த திண் தோள்களுடன் நிற்கிறான். ஆரிய மன்னர் கனக-விசயர் தலைமீது தான் சுமத்திய கண்ணகித் தெய்வத்துக்குரிய 'முதிராக் கலையின் முழுப்பெருஞ் சிலை' காட்டி, “இதோ பார்மீன்கள்! மூவரசும் முச்சங்கமும் முத்தமிழும் திறைகொண்டு, மூவுலகும் வெல்ல எழுந்துள்ள ஆற்றல்சால் அருந்தமிழன்னை! கோவலன் மரபினரே, குறிக்கொண்மின்! என்று கூறி அகமகிழ்கிறான்!

ஈழமன்னன், கொங்கிளங் கோக்கள், மாளவ மன்னர், மகதப் பேரரசாண்டு மாண்ட ஆந்திர மரபினர் நூற்றுவர் கன்னர் ஆகியோர் புடைசூழ நிற்கின்றனர். அவர்கள் தரும் அரும்பெருந்