பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

11

திறைகளை அன்னை திருவடிக்கே அளித்தமைகின்றான், ஆற்றல்சால் அருந்தமிழ்ப் பெருவேந்தன்!

ஆயிரம் ஆண்டு மேற்சென்று, அவன் வழி வந்து, மருண்மொழி நீக்கி அருண்மொழி என்ற புகழ்பெற்ற சோழன் இராசராசன் முத்தமிழ் என்னும் முழக்கோல் கொண்டு முழுதுலகளக்கிறான்! அவன் செம்மல் கங்கை கொண்ட சோழன் முதலாம் இராசேந்திரனின் ஒளி நிழலுருவம் அதோ வங்கத்தில் நின்று புன்முறுவல் பூக்கின்றது! அதன் கையில் சுழலும் சக்கரத்தின் ஒளி கடல் கடந்த ஈழம், கடாரம், காம்போசம், அந்தமான் நிக்கோபார், மாலத்தீவுகள், இலட்சத் தீவுகள், மலாயா, சுமத்ரா, சாவா, போர்னியோ, சயாம், இந்துசீனா- நிலவுலகம் கடலுலகம் எங்கும் எதிர் நிழலிட்டுக் கடலில் குளித்தாடுகின்றது, கரையில் குதித்தாடுகின்றது!

தமிழ்க்குருதியுடன் தெலுங்குக்குருதி தெறித்துப் போட்டி யிட்டுத் திளைத்தாட, தமிழக வீரமும் ஆந்திர வீரமும், கன்னட வீரமும், கலிங்க வீரமும், ஈழத்து வீரமும் கடார வீரமும் கலந்த கடற் பெருந்தானையுடன், பாவேந்தன் செயங் கொண்டான் பாடும் பூவேந்தன் செயங்கொண்டானாக, அதோ குலோத்துங்கன் 'கலிங்கத்துப் பரணி' கொண்ட காளையான கருணாகரத் தொண்டைமானுக்குக் காஞ்சி மாநகரில் வெற்றிப் பதக்க மளிக்கிறான்! ‘தமிழ் மன்னர் வீரம் கடந்தும் என் தமிழ் வீரம் நின்று நிலவி, மீண்டும் அம்மரபு துலக்கும்' என்று கூறுபவர் போல, கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் 'பரணிக் கண்ணாடியிட்டு' நம்மை நோக்குகின்றார்!

அவர் கையின் ஆள்காட்டி விரல் மற்றும் ஒரு பாண்டியனை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது, பின்நோக்கி!

தமிழின் மும்மணிகள்

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி! வேங்கை மார்பனை வென்ற வெற்றிச் சிங்க ஏறு! கானப் பேரெயில் கடந்த காளை! தமிழர் வெற்றிகளுக்கெதிராக அவன் தமிழ் வெற்றிக்கொடி ஏந்துகிறான். தென் மதுரையிலும் அலைவாயிலும் (கபாட புரத்திலும்) முத்தொளி வீசி, மதுரையின் மாணிக்கமாய்