உலகம் சுற்றுகிறது
263
அதன் உள்ளாக்கம் ஆராயப்பட்டபோது, அதுவும் இயற்கையின் சுழற்சியுட் சுழற்சி இயல்புக்கு உட்பட்டதே என்பது காணப் பட்டது. உண்மையில் அது நிலவுலகின் அணுக்கூறாகிய ஒரு நுண்ணிய ஞாயிற்று மண்டலமே என்னலாம்.
அது நடுவே கதிரவன்போல ஒரு கருவுள் பகுதி யையும் (Nucleus) சுற்றிலும் ஒரு கவிகை அல்லது சில கவிகைகளாக (Shells of Orbits) கோள்கள் போலச் சுற்றிச் சுழன்றோடும் மின்மங் களையும் (Electrons) உடையதாக விளங்குகிறது. இம்மின்மங்கள் மின் எதிர் ஆற்றல் செறிந்த நுண்மங்களே. இவற்றுக்கெதிராக, கருவுளின் பகுதிகள் நேர்மின் ஆற்றலுடைய நேர்மங்கள் (Protons), பொதுமின் ஆற்றலுடைய நொதுமங்கள் (Neutrons) ஆகியவை ணைந்தவை.
ய
இயற்கையின் பேரெல்லை அனைத்தண்டம். அதன் சிற்றெல்லை நிலவுலகமல்ல, அணுமண்டலம். முதலது கற்பனை கடந்த பேரெல்லை. மற்றது கற்பனை கடந்த சிற்றெல்லை. ஆனால் இரு திசையிலும் அமைப்பு முறையும் இயக்க முறையும் பெரிதும் ஒத்துள்ளன. 'அண்டமே பிண்டம். அண்டத்திலுள்ளது பிண்டத்திலுமுண்டு' என்ற பழந்தமிழ்ப் பழஞ்சொல் இவ் வுண்மையை நமக்கு நினைவூட்டுகிறது.
வ்
இவ்வளவு இயக்க முறை சுழற்சியுட் சுழற்சியாக, பறக்கும் குதிரை அமைப்பையே நினைவூட்டும் முறையில் அமைந் துள்ளது என்னலாம்.
அந்தரத்தில் சுழன்றாடுகிறது,பறக்கும் குதிரை!
அச் சுழற்சியையே கண்கொட்டாது பார்த்து நிற்கின்றனர் மக்கள் - அதிலேயே மயங்கித் தம்மை மறந்து ஆழ்ந்துள்ளனர்!
பறக்கும் குதிரையின் சுழற்சி மாயத்தில் அவர்கள் உள்ளம் பறிகொடுத்து நிற்கின்றனர்.
ஆனால் பறக்கும் குதிரை மீதிருப்பவன் காணும் காட்சி வேறு, மாயம் வேறு!
அவன் பறக்கும் குதிரை சுழன்றாடுவதையே காணவில்லை. அச்சுழற்சியை அதைக் காணும் மக்களிடம், மக்களைச் சூழ்ந்த மாடமாளிகை கூடகோபுரங்களினிடம், மரஞ் செடி கொடி