பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(276)

||– –

அப்பாத்துரையம் – 18

வட்டத்தின் வட்டமாகிய உருண்டையின் பிழம் பளவு விட்டத்தின் கன அளவில் குறைந்ததாகவே இருத்தல் வேண்டும் என்பது தெளிவு. ஏனெனில் அது விட்டத்தின் நீள அகலமுள்ள கன சதுரத்துக்குள் அடங்குவதே. அது மட்டுமன்று. அது வட்டத்தின் விட்ட உயரமாகிய உருளை (Cylinder) யினும் சிறிது. அதிலும்கூட அடங்குவதே. உருளையின் பரப்பளவு வட்டத்தின் பரப்புடன் விட்டத்தின் பெருக்கம் (TT ~d=dிTT4d) ஆகும்.கணிப்பு மீது உருண்டையின் பிழம்பளவு வட்டத்தின் பரப்புடன் விட்டத்தின் பெருக்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு (d2TT/43/,d= 4TTz I3) என்று காணப்பட்டது.

வ்வாய்ப்பாடுகள்

கணிப்புக்கு வாய்ப்பானவை. அளவைக்குப் பெரிதும் திட்பமானவை. ஆனால் போதிய காரண விளக்கமற்ற வட்ட முரண் குறியளவும் மூன்றில் இரண்டு போன்ற காட்சியுணர்வளவும் கொண்டே கணிப்பு இயங்கிற்று.

வட்டம், உருண்டை ஆகியவற்றின் அளவைகள் மட்டு மன்றி, முக்கோணம், உருளை, கூம்பு (Cone), மோடு (Pyramid), பட்டை (Prism) ஆகியவற்றின் அளவைகளையும் ஆராய வடிவியல் (Mensuration) என்ற தனிக்கணிப்புத் துறை கூட வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கும் வாய்ப்பாட்டு மூலமான குருட்டள வையன்றி அளவைத் தொடர்புகளின் விளக்கத்தில் கருத்துச் செலுத்தப் படவில்லை. இவை வருங்கால இயல் நூலுக்குரிய செய்திகளே யாகும்.

இயல்நூல் பொதுவாக எதையும் கூறுபடுத்தி ஆராய்வதி லேயே கண்ணும் கருத்துமாயுள்ளது. இயற்கையை ஒரே மொத்த மாகத் தொகுத்தாராய்வது அதன் நோக்குக்கு அப்பாற்பட்டது. அத்துடன் அது பெரிதும்; என்ன, எது, எப்படி என்ற வினாக்களையே எழுப்பி விளக்கம் நாடுவது. ஏன் என்ற வினா எழுப்புவதில்லை. இடக்கணக்கியல், வடிவியல் ஆகியவற்றிலோ அது எப்படி என்ற கேள்வியைக்கூட எழுப்பவில்லை.

இயல்நூல் எழுப்பாத வினாக்களை அறிஞர் ஐன்ஸ்டீன் நுண்ணாய்வு எழுப்பியுள்ளது. அதனைப் பின்பற்றி அவர் தோற்றுவித்துள்ள புதிய ஊழி அதன் விளக்கத்திலும் முன்னேறத் தொடங்கியுள்ளது.