பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(284)

அப்பாத்துரையம் – 18

நீளம், அகலம், நிமிர்வு ஆகிய மூன்றளவைகள் கடந்த நான்காம் அளவையாக ஐன்ஸ்டீன் ‘காலத்'தைக் குறிப்பிடுகிறார். இதுபற்றி மேலே விளக்க இருக்கிறோம். வட்டத்துக்கும் கட்டத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு, பின்னது நான்காம் அளவையை உட் கொண்டதாக இருக்கலாம்.

இயற்கையின் நேர்வரைகள் எல்லாமே பெருவட்டக் கூறுகள் என்ற ஐன்ஸ்டீன் புத்தறிவு இடக்கணக்கியலை மட்டு மன்றி இயல் நூலின் எல்லாத் துறைகளையுமே புரட்சிகரமாக மாற்றியுள்ளன; மாற்றி வருகின்றன.

வானநூல் இப்புது மெய்ம்மையை மேற்கொள்ளு முன்பே தற்செயலாக அதன் முடிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளது. இது அறியாமையலையின் உள்ளீடான அறிவலையின் செயலே

யாகும்.

வானநூல் பெரிதும் நேர் காட்சியை அடிப்படையாகக் கொண்டது. அதன் கணிப்புக்களுக்குக் காண்பவன் காட்சித் தளமும் அக்காட்சி மாயமுமே அடிப்படையாகும். தொலை நோக்காடி முதலிய கருவிகள் கொண்டு காணும்போதும் இந்நிலை மாறவில்லை. கணிப்புக்களும் காரணகாரிய ஆராய்ச் சியும் மட்டுமே நிலவுலகம் உருண்டை. அது இயற்கையின் மையமன்று என்பதை மெய்ப்பித்துள்ளது.

காண்பவனை மையமாகக் கொண்ட காட்சி எல்லை ஒரு பெரிய அரைக்கோளமாகவே தோற்றமளிக்கிறது. அதன் மோடு அரைவட்டமாகிய ஒரு நீல வட்டம். நிலப் பரப்பு காண்பவர் வான கோளங்கள் அத்தனையையும் திரையில் காண்பதுபோல அதன் மூலமே காண வேண்டும். அத்துடன் அரைக்கோளமாகிய இம்மோடு அடிக்கடி மாறுவது. ஆகவே அதை ஒரு சுழலும் முழுக் கோளமாகக் கொண்டே வானநூல் கோளப்பாதைகளையும் தொலைகளையும் கணிக்கிறது.

கோளத்தில் உள்ள தொலைகள், பாதைகள் யாவும் கோளசார வடிவின்படிதான் கணிக்கப்பட முடியும். ஆகவே இயல்பாக அதன் நேர்வரைகள் வட்டப் பகுதிகளாகவும், கோணங்கள், முக்கோணங்கள், கட்டங்கள் யாவும் நேர் வரைகளுக்குப் பதில் வட்டப்பகுதி அல்லது வில்வரைகள்