பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அப்பாத்துரையம் – 18

வரலாறு இவற்றைப் பொதிந்தே காட்டுகிறது. ஆயினும், தொழிற்புரட்சி கண்ட உலகப் பேரறிஞர் கார்ல்மார்க்சு இதை விளங்க எடுத்துச் சுட்டிக் காட்டியுள்ளார். தற்கால உலகின் தொழில் முதலாளித்துவம் என்னும் குழந்தை இரண்டாயிர ஆண்டு தமிழகத்தின் கருவிலிருந்து முதிர்ந்து, கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலே பிறந்து, பிறந்தவுடனே தாயறி யாமல் பிரித்தானியச் செவிலியால் மேலையுலகத் தொட்டிலுக்கு இட்டுச் செல்லப்பட்டு, ஜெருமனியிலும், அமெரிக்காவிலும், இரஷ்யாவிலும் இன்று தவழ்ந்தாடி வரும் ஒரு புதுப் பிறவியே யாகும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

தமிழகச் செல்வங்களையும் நூற்றல், நெசவு, சிற்பம், கப்பல்தொழில், பொன்வினை, மணிவினை முதலிய தமிழகத் தொழில்களையும் கைக்கொண்டு தான் ஆங்கிலேயர் தமிழகம் உட்பட உலகின் ஒரு பாதியைக் கைப்பற்றி மறுபாதியையும் திறைகொள்ள முடிந்தது. தமிழ் வாழ்வின் உரங்கொண்டே அவர்கள் தமிழ்மீதும், பிற தாய்மொழிகள் மீதும் ஆதிக்கம் பரப்பி, தம் ஆட்சியையும் மொழியையும் உலகளாவ வளர்த்தனர்!

தொழிலாளர் வாழ்விலும், பொருளியல் கோட்பாடு களிலும் புரட்சி விளைவித்தவர் என்றுதான் கார்ல்மார்க்சைப் பல லரும் அறிவர். உலக வாழ்வையும் வரலாற்றையும் தமிழக வாழ்வையும் வரலாற்றையும் ஒரு நோக்கின் இரு விழிக் காட்சிகளாக இணைத்த புரட்சியறிஞரும் அவரே! தமிழகத்தைக் காணாமலே தமிழ்ப் பண்புகளை நுனித்துணர்ந்த வகையில், தமிழகம் ஈனாத் தமிழ்ப் பண்பாட்டறிஞர் என்று அவரை நாம் குறிக்கலாம்.

கொடி வளர்த்த கோமான் பண்ணை

தமிழகம் இன்று வாழ்வின் செல்வத்தை இழந்துள்ளது. அதன் அவல நிலைக்குக் காரணம் இதுவே. ஆனால், அது வாழ்வின் பண்பை இழந்து விடவில்லை. உள்ளார்ந்த உரத்தையும் நெகிழவிட்டு விடவில்லை. அதன் உள்ளுயிர்ப்பும் வாடிவிட வில்லை. திருவள்ளுவர் பெருமான் யாத்த திருக்குறள் தழைத்