298
அப்பாத்துரையம் – 18
முற்றிலும் கொதி குழம்பாகிய கோளங்களிலோ, முற்றிலும் ஆறியலர்ந்த கோளங்களிலோ உயிர் இருப்பதில்லை. அதுபோல முற்றிலும் நீர் மண்டலம் வற்றிய கோள்களிலும் உயிர் இருக்க மாட்டாது.
நம் உடலின் வெப்பக் கூறு உடல் முழுவதும் பரந்துள்ளது. அதுபோல நீர்க்கூறு குருதியாக உடல் முழுவதும் ஓடுகிறது. அதுவே தோல், தசை, மூளை, நிணம், எலும்பு ஆகிய பிற உடற் கூறுகளை ஆக்கவும் பயன்படுகிறது. இவற்றைத் தமிழர் ஏழு தாதுக்கள் என வகுத்துள்ளனர்.
‘தொக்கு உதிரத்தோடு ஊன் மூளை நிணம் என்பு சுக்கிலம் தாதுக்கள் ஏழு.'
தாதுக்களைத் தொகுத்துரைக்கும் ஒளவைக் குறளின் பா இது.
நீரே உடலின் அடிப்படைப் பொருள், உடலின் பெரும் பகுதி நீரே. உயிரினம் முதன் முதல் பிறந்தது நீரில்தான். நீர் கலந்த காற்றையே நீர் வாழ் உயிர்கள் உயிர்க்கின்றன. ஆனால் மற்ற உயிர்கள் வகையிலும் உயிர்ப்பரப்புக்களும் உயிர்க்கும் காற்றில் சிறிது ஈரம் இருந்தால் மட்டுமே மூச்சுவிட முடியும்.
நீரின் இன்றியமையாமை பற்றிக் கூறுகிற திருக்குறளின் அதிகாரம் அதை மழை வடிவில், வான்பெற்ற பெயருடனேயே குறிக்கப்படுகிறது. நீர் மண்டலத்தின் பெரும்பகுதி கடலா னாலும், உயிர் பேணும் வகையில் அதனின்று கதிரவன் வெப்பத்தால் எழும் முகில்கள் வானத்திலிருந்து பொழியும் மழையே அதன் உயிர்ப்பகுதி என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இச்செயலால் நீர் மண்டலத்தின் பயன் முற்றிலும் நிலவுலக இயக்கத்தின் விளைவு ஆகிறது. நிலவுலகம் சுற்றுவதாலேயே நிலவுலகின் ஒரு பகுதியில் வெப்பு ஏற, அது கடல் நீரை ஆவியாக்கி முகில் எழுப்பி மழைபொழியச் செய்கிறது.
குமரகுருபரரின் நீதிநெறி விளக்கப் பாடலொன்று இதனை
விளக்குகிறது.
‘பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி