பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(300

அப்பாத்துரையம் – 18

ஒலி யங்க உதவுவது, வானொலியலைகளை நிலவு லகைச் சுற்றிச் சுழலச் செய்வது ஆகிய யாவும் காற்று மண்டலத் தின் செயல்களே. நீரில் கலங்களை ஓட விடுவது போல, வான வெளியில் வானூர்திகளை ஓட விடுவதும் காற்று மண்டலமே.

உயிர்களின் உடலுக்கும் பொருள்களுக்கும் உருத் தரும் சரிசம அழுத்தம் காற்று மண்டலத்துக்கு உரியதே.

மனிதன் நிலமண்டலத்தையும் நீர்மண்டலத்தையும் கடந்து செல்வதுபோல அவ்வளவு எளிதில் காற்று மண்டலத்தைக் கடந்து செல்ல முடிவதில்லை. உணவில்லாமல், நீரில்லாமல் அவன் நாட்கணக்கிலாவது வாழ முடியும். காற்றில்லாமல் சில கணங்கள் கூட வாழ்தல் அரிது. அத்துடன் நாம் மூச்சுவிடுவதற்கு நிலத்தளத்திலிருக்குமளவு அழுத்தமுள்ள காற்று, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்படாத, குறையாத வெப்பம், ஈரம் ஆகியவற்றை உடைய காற்று இன்றியமையாதது. இந்தப் பண்பு களுடைய காற்று இயங்கும் எல்லையில் தான் மனிதனும் உயிர்களும் இயங்க முடியும்.

வெப்பம் நீர் ஆகியவற்றைப்போல, அவற்றினும் உயிருக்கு இன்றியமையாதது காற்று. அதுவும் நிலவுலகின் சுழற்சியினா லேயே பிறக்கிறது, இயங்குகிறது. ஆறிவரும் எரி குழம்பு நிலையிலுள்ள கோள்களின் மேற்பரப்பிலிருந்தும், வெப்பேறி வரும் நீர்மண்டலங்களிலிருந்தும் பிரிந்து கோள்களைப் போர்வைபோலப் போர்த்துள்ளது அது. கதிரவன் வெப்பத் தாலும் நிலத்தின் சுழற்சியாலும் ஏற்படும் பல்வகை வெப்ப அழுத்த வேறுபாட்டாலேயே அது நிலவுலகம் சுற்றி இயங்கு கிறது.

நிலவுலகின் நீர்மண்டலம், நிலமண்டலம் ஆகிய தென் வட கோளங்களுக்கிடையே தென் வடக்காக வீசும் காற்று, தென் மேற்கு வட கிழக்காக இயங்குவதும் நிலவுலகச் சுழற்சியாலேயே. மேற்கிருந்து கிழக்காகச் சுழலும் நிலவுலகின் சுழற்சி வேகம் வடக்கே செல்லும் காற்றை வட கிழக்காகவும், தெற்கே செல்வதைத் தென் மேற்காகவும் திருப்பி விடுகிறது.

வெப்பம், நீர், காற்று ஆகியவற்றைப்போல நிலமும் உயிர்க் கூறேயாகும். இதனைப் பலர் உணர்வதில்லை, கூர்ந்து கவனிப்ப