304
அப்பாத்துரையம் – 18
முற்றிலும் தவறுமன்று. உண்மையில் அது மண்ணில் பிறப்ப தில்லை, மண்ணில் மடிவது மட்டுமே. மண்ணாகப் பிறப்ப தில்லை. மண்ணாக மடிவது மட்டுமே. அது உயிரின் மரபுத் தொடர்ச்சியாக, உயிருடைய உடலிலிருந்து, உடல் வாழ்விலே பிறப்பது. ஆயினும் அதன் உயிர் மரபு தொடக்கத்தில் மண்ணிலிருந்து பிறப்பதே. அதன் உடலாக்கமும் மண் முதலிய இயற்கைப் பொருள்களின் ஆக்கத்துடன் வேறுபாடற்றதே. தவிர, உயிர் மரபு மண் சார்ந்தது மட்டுமன்று. உயிர் வாழ்விலும் உயிர் வளர்ச்சிக்குரிய உணவு தருவது மண்ணே. புதுப் பிறப்பு, அதாவது மரபு வளர்ச்சிக்குரிய ஊட்டம் அளிப்பதும் மண்ணே.
-
நேரடியாக உயிர்களின் உடல் மண்ணில் பிறப்பது என்று கூற முடியாவிட்டாலும், அது பேரளவில் உண்மையேயாகும்.
-
நிலவுலகில் உயிரிலாப் பொருளும் உயிர்களும் உயிராற்றல் ஒன்றாலன்றி வேறு படுவனவல்ல உடலாக்கத்தால் வேறுபடுவனவல்ல. ஆயினும் உயிரிலாப் பொருளின் ஆக்கத்தில் இல்லாத உயிர்ப்பு, மரபுத் தொடர்ச்சி, வளர்ச்சி,ஒழுங்கு உயிரிலா உடலாக்கத்தில் உண்டு. ஒழுங்கு அடிப்படையாகத் தேர்வு, தேர்வு அடிப்படையாக வளர்ச்சி, மரபுத் தொடர்ச்சி, தன் இனப்பெருக்கம் ஏற்படுகின்றன. இவையே உயிரின் உயிர்ச் செயல் இவை நீங்கலாக உயிரின் உடலில் உள்ள எல்லாப் பொருட் கூறுகளும் நிலத்தின் கூறுகளே.
நாமும் உயிரினங்களில் ஒரு பெரும் பகுதியும் நிலத்தின் மீதே வாழ்கிறோம். நீரில் வாழ்பவையும் வானில் பறப்பவையும் கூட நிலத்தை அடுத்தே கூடுகட்டி வாழ்கின்றன. நிலத்தின் வளமும் நீரில் கரைந்த நிலவளமுமே அவற்றுக்குப் பெரிதும் உணவாகின்றன.
-
நாம் உண்பது மண்ணின் கூறு மண்ணிலிருந்து கீழின உயிர்கள் பெற்றுத் தரும் நிலக்கூறுகளே. நம் ஆக்கத்துக்கும் வளத்துக்கும் மரபு வளங்களாகிய வளர்ச்சிக்கும் இனப் பெருக்கத்துக்கும் அடிப்படை அவையே.
உயிருடைய நிலப்பொருட் கூறு நம் உடல். அது எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அல்லது விறகு போன்றது. இவ் எரிவிளக்கின் எண்ணெய், திரி, இவ் எரி விறகின் கட்டையும் நிலப்