பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




308

அப்பாத்துரையம் – 18

கதிரவனிடமிருந்து ஒளி மட்டுமன்றி ஒளியுடன் வெப்பமும்

நம் நிலவுலகுக்கும் பிற கோள்களுக்கும் வந்தெட்டுகின்றது.

ஐன்ஸ்டீன் ஊழிக்குள் இவற்றில் சில முரண்பாடுகளாவது தீர்ந்துள்ளன.

ஒளியும் வெப்பமும் ஒரே ஆற்றலின் இரு இயக்கங்கள். ரு அதுபோல மின் இயக்கம், காந்த இயக்கம் ஆகியவை ஒரே ஆற்றலின் இரு இயக்கங்கள். பொருளின் பொருட்கூறு அணுகிய பின்னர் அச்சூழலிலேயே ஒளி வெப்பமாகவும், மின் இயக்கம் காந்த இயக்கமாகவும் பரவுகின்றன என்று காணப்பட்டுள்ளது.

இவ்விளக்கம் பின்னும் ஒளி, மின் ஆற்றல்கள் எவ்வாறு பொருளின் பொருட் கூறற்ற அகல்வெளியில் விரைகின்றன என்பதனை இசைவித்துக் காட்ட முடியவில்லை.

வை அலை இயக்கங்கள். அலைகள் நீர், காற்றுப் போன்ற ஓர் ஊடு பொருளில்லாமல் எப்படி இயங்க முடியும்? அகல் வெளியில் அவற்றுக்குரிய ஊடு பொருள் யாது?

குழந்தைகள் அறியா வினாக்களுக்குப் பொருத்தமான விளக்கம் விடை கூற முடியாதவர்கள், அதன் அறியாமையையே பயன்படுத்த எண்ணிச் சப்பைக் கட்டு விளக்கங்கள் கூறுவ துண்டு. இயல்நூலார் சிலகாலம் இத்தகைய விளக்கமே

கண்டனர்.

ஐம்பூதப் பாகுபாட்டில் வானை இல்பொருளாகக் கொண்டு அக்கோட்பாட்டின்மேல் ஏளனக் கணைமீது இறு மார்ந்த புன்னகைக்கணை ஏவிய அதே அறிவார்ந்த இயல் நூலார், இப்போது புதிய அறிவூழியின் வினாவுக்கு அந்தப் பழைய விடையையே புதிய உருவில் தேடி எடுத்துத் தந்தனர்.

பொருளின் பொருட்கூறு இருக்குமிடத்திலும், பொருளின் பொருட்கூறு இல்லாத அகல்வெளியிடத்திலும் எங்கும் வான் போன்ற விண்மம் (Ether) என்ற ஊடுபொருள் நீக்கமற நிறைந்து, ஒளியலை, மின்காந்த அலைகளை ஏந்துகின்றன என்று கூறினர். அது மட்டுமோ?

'நிலவுலகை அரக்கன் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலடியில் சென்று ஒளித்தான்' என்று புராணிகர் கூறிய போது, ‘அரக்கன் எதன் மீது நின்று சுருட்டினான்? 'நிலத்தைச் சுருட்டிய