பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

அறிவுடைக் குரிசில்

அப்பாத்துரையம் – 18

கோமான் குடியில் அறிவுடைக் குரிசில் ஒருவன் தோன்றினான். அவன் சிந்தித்தான்; சூழல் ஆய்ந்தான். வரலாறு துருவி நோக்கினான். முன்னிலை பின்னிலைகளை ஒப்பிட்டுப் பார்த்தான். சார்நலம், எதிர்நலம் வகுத்துணர்ந்தான். அவன் உள்ளத்தில் அமைதி ஏற்பட்டது; உவகை பிறந்தது.

'தாய்ப்புல வளர்ச்சி சேட்புலம் சென்றது. இது மிகச் சிறு கேடு, கேடேயன்று! தாய்ச் செடி வளர்ச்சி சேய்க் கொடிவளர்ச்சி கண்டது. இதுவும் கேடன்று, தாய்க் கொடியின் உயிர் வளத்துக்கு ஒரு நற்சான்றே! கேடுகள் யாவும் உண்மையில் கோமான் குடியினரின் முயற்சியின்மை, ஆய்வறிவின்மை ஆகியவைதாம்!”

குரிசில் இவற்றைக் குறித்துணர்ந்தான்.

அவன் சிந்தனை அவனுக்குப் பின்னும் உவகை ஊட்டிற்று 'தாய் வளர்ச்சி புறஞ் சென்றபோதும், சேய் வளர்ச்சி பெருகியபோதும், தாய் நிலவளம் குன்றியதில்லை. கொடுக்கக் கொடுக்கக் குறையாத இயற்கை வளம் அது. ஆகவே பொருமல் தேவையில்லை. தவிர, வெற்றிலைக் கொடி மரபுதான் அயல் புலங்களில் பரவிற்று. அதற்கு ஆக்கந்தரும் பாக்கு வளமும் சுண்ண வளமும் இன்னும் கோமான் புலத்தின் எல்லைக்குள்ளேயே இருந்தன.

குரிசில் இவற்றை ஆய்ந்து கண்டான்.

அவன் பொறுமையுடன் மீண்டும் வெற்றிலைப் பண்ணை வளர்த்தான். முன்னோன் அறிவு மரபு பேணி, அயல் புலத்தவரைத் தாண்டி வளங் கண்டான். அது மட்டுமோ? தன் புதுமுறைகளை அவன் அயல்புலத்தவர்க்கும் காட்டி அவர்கள் வளமும் பெருக்கினான். மூட்டிலிருந்து அவன் உருவாக்கிய கொடிகள் அயல்புலத்தவர் உருவாக்கியவற்றைவிடச் சிறந்தவை யாய் இருந்தன. சேய்நிலத்தவர் அதன் மேம்பாடு கண்டு, அதைப் பெற்றுத் தாய்நில வெற்றிலைக் கொடியுடன் தாய்நிலப் பாசமும் வளர்த்தனர்.

தாய் நிலவளம் பெருகிற்று. சேய் நிலவளங்களும் பெருகின. தாய் நிலவளம் சேய் நிலங்களின் வளங்களைப் பாதிக்கவில்லை,