பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

17

அவற்றைப் பெருக்கிற்று. அதுபோலச் சேய் நிலவளங்கள் தாய் நிலவளத்தைப் பாதிக்க வில்லை, அதைப் பெருக்கின. ஏனெனில், எல்லா வளங்களையும் வாணிக வளமாகக் கொண்டு பரப்ப, குரிசில் வெற்றிலைப் பண்ணையின் கூட்டுறவு வாணிகக் களம் ஒன்று நிறுவினான். பண்ணைக் கோமான் இப்போது பண்ணைகளின் கூட்டுக் கோமான் ஆயினான்.

வெற்றிலை வளம் பெருக்கக் கோமான் பாக்குத் தொழில் பண்ணைகளும் கமுகப் பண்ணைகளும், சுண்ணத் தொழில் பண்ணைகளும் தோற்றுவித்துப் பெருக்கினான். பண்ணை கூட்டுப் பண்ணையாய், கூட்டுப் பண்ணை ஒரு சிறு வளநாடாக வளர்ந்தது.

வல்லாட்சி, வீரஆட்சி, செல்வஆட்சி ஆகிய யாவற்றிலும் மேம்பட்ட அறிவாட்சி, அன்பாட்சி, அருளாட்சி செலுத்தினான், கோமான் மரபில் வந்த குரிசில்!

தமிழ் மரபு

கோமான் மரபு என்று இங்கே குறித்தது வள்ளுவர் தமிழ் மரபையே. இயற்கை யளாவித் தமிழ் முன்னோர் வகுத்த மரபு, தமிழ் முன்னோரை அளாவி வள்ளுவர் வகுத்த மரபு ஆகிய

ரண்டும் இன்று உலகளாவி உலக நாகரிக மாகவும், உலகப் பண்பாகவும் வளங்கண்டுள்ளன. ஆனால், அயல்புலத்தவரளவு முயற்சிகூட, அறிவுப் பண்புகூட இல்லாமல், தம் இயற்கைப் பண்பைக் காடாக வளர விட்டனர் தமிழர், களை செறிய விட்டனர்! இதனால், அவர்கள் வாழ்வில் பிந்திவிட்டனர்; அது மட்டுமோ? உலகின் முன்னேற்றத்துக்கும் ஒரு கால்கட்டாகக்கூட நிலவி வருகின்றனர்.

தமிழர் வாழவேண்டுமாயின், கோமான் மரபில் புது மலர்ச்சி யூட்டிய குரிசிலைப் போன்ற இளங்காளையரை, ஏந்திழையரைத் தமிழர் தோற்றுவிக்க வேண்டும்; அவர்கள் வழி நிற்கவேண்டும்! நின்று செயலாற்றி முன்னேற வேண்டும்!

நாம் திருமண விழாவிலும், பொங்கல் விழாவிலும் ‘வாழ்க, பொங்குக' என்று வாழ்த்தினால் போதாது! வாழ்வு மரபில் நின்று வாழ்ந்து, வாழ்த்து மரபில் நின்று வாழ்த்தப் பயிலுதல் வேண்டும்.