பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அப்பாத்துரையம் – 18

அவ்வழியே மீண்டும் தமிழ் மரபு வாயிலாக, தமிழ் இலக்கிய வாயிலாக, தமிழர் வாழ்க்கைப் பண்பையும் வாழ்த்துப் பண்பையும் கண்டுணர்ந்து பின்பற்றுதல் வேண்டும்.

கோமான் மரபு நீடிக்க, குரிசில் மரபு தோற்றுவிக்கத் தக்க சூழ்நிலைகளை நாம் காண்கிறோம். அவற்றை வகுத்து வருகிறோம். அவற்றை மறுமலர்ச்சி யார்வம் இன்னும் வளமாக்கிப் பெருக்குதல் வேண்டும். குரிசில்களுக்கான குருக்களை (வித்துக்களை) நம்பியர் நங்கையர் உள்ளங்களில் உழுது விதைத்தல் வேண்டும்.

கோமான் பண்ணையின் வளம் மாறாது நீடித்தது போல, தமிழ் மொழியின் பண்பு வளம், தமிழினத்தின் குருதி வளம், உரவளம் இன்னும் மாறாமல் நீடித்தே வருகின்றன. கோமான் மரபின் அறிவு வளந்தான் சிந்தனையற்ற இடைக்கால இருளின்போது தூங்கிக் கிடந்து வந்துள்ளது. குரிசில் வாழ்வு அதைத் தட்டி எழுப்பியது போல, தமிழர் தங்கள் அறிவுப் பண்பை மீண்டும் தட்டி எழுப்புதல் வேண்டும்.

வாழ்க என்னும் சொல்லின் பண்பு வளமே நம்மை அவ்வகையில் தூண்டவல்லது. வள்ளுவர் வகுத்த வாழ்வியல் நூலாகிய திருக்குறளே நம்மை அவ்வழியில் நெடுந்தொலை கொண்டு ஊக்கத்தக்கது. அவற்றில் கருத்துச் செலுத்துவோம்.