பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




=

2. வாழ்வியல் வண்ணம்

தமிழ் இலக்கியத்திலே வாழ்க என்ற சொல் வாழி, வாழியர் என்ற பல வடிவங்களுடன் இயங்குகின்றது. வாழ்கவே, வாழியே, வாழியவே, வாழியரோ என்று அது பல இசைபடப் பாட்டுக்களில் பாடப் பெறுகிறது.வாழி வாழி, வாழ்க வாழ்கவே என்று அழகிய தொனிபட இரட்டித்தும் பன்மடங்காக அடுக்கியும் அதை வழங்குவதுண்டு.

அதன் சொல்லாக்க வளமும் பெரிது. வாழ், வாழ்தல், வாழ்வு, வாழ்க்கை, வாழ்த்து, வாழ்த்துதல், வாழ்நன் அல்லது வாணன் முதலிய சொற்களும்; வாழ்நாள் அல்லது வாணாள், வாழ்முதல் (கடவுள்); வாழ்வகம்; வாழ்த்துரை, வாழ்த்துப்பா, வாழ்த்திதழ்; வாழ்க்கைத் துணை, வாழ்க்கைத் துணைநலம்; இல்வாழ்க்கை, குடிவாழ்க்கை, வாழ்வரசி, வாழ்வேந்தன்; வாழ்க்கைத் தொழில், வாழ்க்கைக் கோட்பாடு, வாழ்க்கைப் படுதல் முதலிய எண்ணற்ற தொடர் சொற்களும் இதற்குச் சான்று பகர்கின்றன.

பொருள்வளம், நீடித்த இனமரபு, பண்பின் ஆழ அகலப்பரப்பு ஆகிய வற்றிலும் ‘வாழ்க' என்னும் சொல் வியக்கத்தக்க இயல்புகள் உடையது ஆகும்.

சொல் வளமிக்க தமிழ் மொழியின் வளம் முழுவதையும் வாழ்க என்னும் சொல் கொண்டுள்ளது என்றால் தவறில்லை. அஃது அத்தனை தமிழ்ச் சொற்களுடன் அளவளாவி அவற்றின் மரபுகளுடன் இணைந்து வளர்ந்துள்ளது.

தமிழில் பல்லாயிரக்கணக்கான சொற்கள் உள்ளன. மற்ற மொழிகளின் சொற்கள் தாண்டி அவை மனித இன நாகரிகத்தின் வேர் முதல் தடவுவன். அதே சமயம் மனித நாகரிகத்தின் உச்ச உயர் அறிவுப் பண்புடனும் கலைப் பண்புடனும் அவை விராவி,