பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

அப்பாத்துரையம் – 18

மனித இன நாகரிகமெங்கும் பண்பலைகள் பரப்புபவை. அத்துடன் சொல் தொடர்பு, பொருள் தொடர்பு, மரபுத் தொடர்பு, பண்புத் தொடர்பு ஆகியவற்றின் திறங்களால் தமிழின் சொற்கள் இயல்பாகவே குடும்பம் குடும்பமாக, சமுதாயம், சமுதாயமாக, இனம் இனமாக வகை தொகைப் படுபவை. அனைத்தும் ஒரு சேர ஒரே சொற்பேரினத் தொகுதியாக இயங்குபவை. வாழ்க என்னும் சொல் கிட்டத்தட்ட இவ்வெல்லாச் சொற்குடும்பங்களுடனும், சொற் சமுதாயங் களுடனும், சொல் இன, சொற்பேரினங்களுடனும் தொடர்பு கொண்டு; தமிழ்மொழி வாழ்விலும், தமிழின வாழ்விலும், மனித உலக வாழ்விலும் ஆழ்ந்தகன்று வேரூன்றிப் பரந்த ஒரு சொல் என்பது கூர்ந்துணரத்தக்கது.

வி

இச் சொல்லைத் துருவி ஆராய்ந்தால், தமிழ்ச் சொற்களு களுடனும் உலகப் பிறமொழிச் சொற்களுடனும் அது கொண்டுள்ள தொடர்பை ஒப்பிட்டுணர்ந் தால், அது தமிழர் வாழ்க்கைக் கோட்பாடு என்னும் அடித்தளத்தையும், அதன்மீது திருவள்ளுவர் பெருமான் கட்டமைத்த தமிழ்ப் பண்பாட்டையும், இரண்டையும் மய்யமாகக் கொண்டு வளர்ந்த உலக நாகரிகப் பண்பாட்டையும் செவ்வனே விளக்குவதாய் அமையும்.

பொருளும் பண்பும்

சில சொற்கள் இலக்கிய வழக்கில் மட்டுமே இடம் பெறும்; வேறு சில சொற்கள் மக்கள் வழக்கில் மட்டுமே இயங்கும். இரண்டிலும் வழங்கும் சொற்களையே தொல்காப்பியகாலத் தமிழர் இயற்சொற்கள் என்று வகுத்தனர். இரு வழக்குகளும் உடைய சொற்களும் இரு வழக்குகளினிடையே வேறுபடு பவை; திரிபவை உண்டு. ஆனால், வாழ்க என்னும் சொல் இவை போன்ற தன்று. வியத்தகு நிலையில் அஃது இலக்கிய வழக்கு, மக்கள் வழக்கு இரண்டிலும், தமிழகம் எங்கணும், தொல்காப்பியர், திருவள்ளுவர் கால முதல் இன்றுவரை ஒரே வளமும் ஒரே வளர்ச்சியும் உடையதாக இயங்குகிறது. இன்று அது கொள்ளும் பொருள்கள் அத்தனையையும் திருக்குறளிலேயே நாம் காணலாம். மக்கள் வாழ்க்கையில் இன்று வழங்கும் உயிர்த் தமிழிலும்

காணலாம்.