பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம் – 18

இணங்கி வாழ்தல் அமைகின்றது. ஒப்புரவுப் பண்பை இப்படியில் வாழ்தல் குறித்தது.

சொற்பொருளின் மூன்றாவதுபடி தமிழர் பண்பாட்டின் படி ஆகும். இன்ப நோக்கம், பயன் நோக்கம், வளர்ச்சி, வளம், பெருக்கம், இனப்பெருக்கம் ஆகியவற்றை இப்படியில் வாழ்வு என்ற சொல் உணர்த்துகிறது. இந்தப் படியே இன்று பண்புடைய உலக நாகரிகமாக வளர்ந்துள்ளது.

அடுத்த இரண்டு படிகளும் தமிழ் மரபின் உச்சியையும் திருவள்ளுவர் திருக்குறளின் தனிப் பண்புகளையும் சுட்டிக் காட்டுபவையாகும். அவையே புகழ் பெறுதல், நீடித்து நின்று நிலவுதல் என்ற பொருள்கள் குறித்தன.

உலகின் அருட்பெரியார் மரபுகளையும், அவர்கள் கண்ட அருட்சமயங் களையும் தூண்டிய படி இதுவே. இப் படியில் தமிழகமோ, உலகமோ இன்னும் முன்னேறவில்லை. தமிழ்ப் பண்புணராத இழிபண்பினர் கையில் உலகச் சமயங்கள் சிக்கிச் சீரழிவதே இதன் காரணம் ஆகும். தமிழ் மரபும் தமிழ்ப் பண்பின் தொடர்பும் தமிழகத்திலேயே தட்டுக்கெட்ட நிலை இதற்குப் பெரிதும் உதவிற்று!

‘வாழ்தல்' என்று கூறும்போது, மனித நாகரிகத்தின் இந் நான்கு படித்தளங்களையும் நாம் ஒருங்கே குறிக்கிறோம். வாழ்க என்று தமிழர் கூறும்போதும், இந்நான்கு தளங்களும் தமிழர் மனக்கண், அறிவுக்கண், உணர்ச்சிக்கண் ஆகியவற்றின்முன் தோன்றாமலிருப்பதில்லை. சொல்லின் இனிமை கடந்து, சொற்பொருள் கடந்து, வாழ்க என்னும் தமிழ்ச்சொல் பரப்பும் பண்பு அலை, மரபு அலை இதுவே.

தமிழ், கிரேக்க இலத்தீனப் பண்புத் தொடர்பு

இன்றைய உலக மொழிகள் பலவற்றிலும் மூச்சு, ஆவி, உயிர், வாழ்தல், வாழ்க்கை, வாழ்வு, வாழ்நாள் ஆகியவை தொடர்பு பட்ட சொற்களாய் இருப்பது காண்கிறோம். இவற்றுள் ஒன்றும் பலவும் பல மொழிகளில் ஒரே சொல்லால் அல்லது ஒரே சொல்லின் திரிபால் உணர்த்தப்படத் தக்கவையாய் உள்ளன. தற்கால மொழிகளுள் ஒன்றான ஆங்கிலத்திலும் இடைக்கால