பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

23

மொழிகளுள் ஒன்றான சமற்கிருதத்திலும் இப் பண்பை முனைப்பாகக் காணலாம்.

ஆங்கிலத்தில் உயிர் என்பதற்குரிய சொல்லே (பெயர்ச் சொல்; வினைச்சொல்) உயிர் என்ற கருத்தை மட்டுமன்றி, உயிர்ப்பொருள், வாழ்க்கை, வாழ்வு, வாழ்நாள் ஆகிய பொருள்களையும் தருவதாகும். சமற்கிருதத்திலும் (ஜீவ என்ற சொல்) அத்தகையதே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழில் முதல் மூன்றும் சில சமயம் ஒன்றுபடுத்தப்படலாம். பின் நான்கும் சில சமயம் ஒன்றுபடுத்தப்படலாம். ஆயினும், முன் மூன்றுடன் (உயிர்) பின் நான்கும் (வாழ்தல்) பொருள் தொடர்புடையவையாயினும், என்றும் ஒரு சொல்லால் குறிக்கப்பட முடியாதவையாய் உள்ளன.

உயிர் என்ற சொல் தமிழில் பெயர்ச்சொல்லாய் வரும் போது உயிரையும் மூச்சையும் குறிக்கக்கூடும். ஆனால், வினையாக (உயிர்த்தல் என்ற வடிவில்) வரும்போது அது மூச்சுவிடுதலை மட்டுமே குறிக்கும். ஆங்கிலத்தையோ சமற்கிருதத்தையோ போல, உயிருடன் இயங்குதலை ஒருபோதும் குறிப்பதில்லை. அதுபோலவே, வாழ்தல் என்பதன் பெயர்ச்சொல் வடிவும் உயிருடன் இயங்குதலைக் குறிக்குமேயன்றி, உயிரை ஒரு போதும் குறிப்பதில்லை.

உயிர், வாழ்க்கை என்ற சொற்களின் இரு வேறுபட்ட சொல்மரபுப் பண்பை நாம் தமிழில் மட்டுமன்றி மேலை உலகின் பண்பட்ட பண்டை மொழிகளான கிரேக்க இலத்தீன மொழிகளிலும் காண்கிறோம். இவ்விரண்டு மொழிகளிலும் உயிர் என்பதற்கு ஒரு தனிச் சொல்லும் (கிரேக்கம் ; இலத்தீனம் ) வாழ்க்கை என்பதற்குப் பிறிதொரு தனிச் சொல்லுமே (கிரேக்கம்: இலத்தீனம் ஏவைய) உள்ளன.

உயிருடன் இயங்குதல்தான் 'வாழ்தல்' என்பது; மனித நாகரிகத்தின் காட்டுநிலை, நாடோடி நிலை மரபைக் காட்டுகிறது. உலகின் தற்கால, இடைக்கால மொழிகள் இப்பண்பு கடந்து சொல் மரபில் வளரவில்லை. அதற்கு மேற்பட்ட 'குடிவாழ்வு' குறித்த நாகரிகப்படியைத் தமிழ் மொழியும் கிரேக்க இலத்தீன மொழிகளும் மட்டுமே காட்டுகின்றன.