பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

25

ஆ, ஆன் என்ற சொல்லும் அவற்றுடன் மா என்ற சொல்லின் இணைவாகிய ஆன்-மா என்ற தொடர் சொல்லும், உயிர்ப்பண்பு, உயிர்ப் பொருள் என்ற வேறுபாடின்றி, உயிர்நிலை அல்லது உயிரின் தனித்தன்மை குறித்த அறிவுத்துறைச் சொற்கள் ஆகும். 'ஆன்மா' சமற்கிருத வழக்காக இடைக் காலத்தில் கொள்ளப்பட்டபின், 'பொது உயிரான இறைவற்கும் தனி உயிர்க்கும் ஒருசேர வழங்கிய பண்டைத் தமிழ்ச்சொல் ‘ஆன்’ மரபிழந்தது.

‘உயிர்' என்ற சொல் ‘உய், 'இரு' என்ற இரு சொற்களால் ஆகியது. 'இர்' தொழில் பெயர் விகுதி என்றாலும் ஒக்கும். உய்த்து, அதாவது மாள்வு தவிர்த்து இருப்பது என்பதே அதன் பொருள். சாவா உயிர் ஆன், சாவு கடந்து வாழ்வது ஆன்மா அல்லது உயிர் என்ற கருத்து அச்சொல்லில் தாக்கியுள்ளது. தமிழர் அறிவுநூல் மரபு அழிவுற்ற பின், சமற்கிருதத்திலும், கிரேக்க இலத்தீன மொழிகளிலும் 'உயிர்' என்ற பொருள் குறித்த சொற்களுடன் ணைவான பழைய தமிழ்ச் சொற்கள் (மா, உயிர்மெய்) மரபற்று அழிந்தன. ‘உயிர்’ இன்றைய குறுகிய, ஆனால் பண்பு வளமிக்க பொருளில் வழங்கலாயிற்று என்னலாம்.

தமிழில் அழிதல், சாதல், இறத்தல், மாள்தல் என்ற எல்லாச் சொற்களும் ஒழிதல் அல்லது இல்லாதுபோதல் என்னும் பொருளை உடையவை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கூர்ந்து நோக்கினால், இது தவறு என்பது தெரியவரும். அழிதல் உயிரிலாப் பொருள்களுக்கு மட்டுமே வழங்குவது. அதன் சொற்பொருள் உருத்திரிதல், அல்லது உரு இல்லாமல் போதல், மாவாக, குழம்பாக, உருவற்ற பிழம்பாகப் போதல் என்பதே. சோறு குழைதலை இன்னும் அழிதல் என்று கூறுவது இதனாலேயே யாகும்.

சாதல் உயிர்ப்பொருள் சுட்டிய வழக்கு; நிறைதல் அதன் பொருள். சாப்பாடு நிறை உணவு குறித்தல் இப் பொருளிலேயே யாகும். உடலின் பயன் நிறைவுற்று, அது பயனற்றதாக ஒதுக்கப்படுதலையே சாவு குறிக்கும். அதன் மறுசொல்லாக, இடக்கரடக்கலாக வழங்கப்படும் இறத்தலோ, கடத்தல் என்று பொருள்படுவது. 'இறைவன்', ('கடவுள்') என்ற சொல்லின் பகுதி அதுவே. ஒரு தலைமுறை வாழ்வு கடந்தான் என்பதே அதன்