பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

27

ஆசி கூறுவதற்குரியவர் அதனைப் பெறுபவர்களிலும் மேம்பட்டவர்கள். ஆனால், வாழ்த்துதலுக்கு இத்தகைய வரம்போ, கட்டுப்பாடோ கிடையாது. அது வாழ்த்துக்குரியார் வாழ்வுடன் இணைந்தயாவர்க்கும் உரியது. அது கிட்டத்தட்ட உலகளாவிய, இனமளாவிய பரப்புடையது. ஏனெனில், தாய் தந்தையர் பிள்ளையை வாழ்த்துவது போல, பிள்ளைகள் தாய் தந்தையரை வாழ்த்தலாம். அரசன் குடிகளை வாழ்த்துவது போலவே, குடிகள் அரசனை வாழ்த்தலாம். ஆண்டவன் தம் அன்பரை வாழ்த்துவது போலவே, அன்பர் ஆண்டவனை வாழ்த்தலாம்!

தமிழிலக்கிய வழக்கில் வாழ்த்தின் இப்பரந்த பண்பைத் தெள்ளத் தெளியக் காணலாம். மன்னனை முனிவர்மட்டுமன்று, அவன் அமைச்சரும் படைத்தலைவரும், அவன் வாயில் காப்போரும்கூட வாழ்த்தினர்! வாழ்த்திய பின்னரே மன்னரிடம் பேசுதல் தமிழ் அரசவை மரபாயிருந்தது.

அரசவையில் மன்னன்முன் மட்டுமன்று, தனிப்பட்ட குடும்ப வாழ்வில் கூட, மன்னரை வாழ்த்தும் சீரிய தேசியப் பண்பு தமிழகத்தில் நிலவியிருந்தது. ஐங்குறுநூற்றின் மருதத்திணையின் பத்துப் பாடல்களுமே மன்னன் ஆதன் அவினியை வாழ்த்தி அகத்துறைப் பொருள் கூறுகின்றது காணலாம்.

'வாழி ஆதன்' வாழி அவினி!

வேந்து பகைதணிக! யாண்டு பல நந்துக!’

எனவேட் டோளே யாயே: யாமே

மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்

தண்துறை ஊரன் வரைக,

எந்தையும் கொடுக்க எனவேட் டேமே!'

(ஐங்குறு நூறு 6)

வாழ்த்துக்குரிய ஆங்கிலச் சொல்லும் (bless) இதே பண்புடையதாய் இருப்பது காண்கிறோம். கிறித்தவத் திருநூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்கள் ஆங்கிலச் சொல் தமிழ்ச் சொற்களின் பண்புகளையோ, சமற்கிருதச் சொல் (ஆசீர்வாதம்) மரபையோ உணராமல், வாழ்த்தல் (bless), வாழ்தல் (be blessed) என்ற மூல மொழியின் பண்பார்ந்த சொற்களை