பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அப்பாத்துரையம் – 18

சீர்வதித்தல், ஆசீர்வதிக்கப் படல் என்ற உணர்ச்சியற்ற சொற்களாக மொழிபெயர்த்துள்ளனர்!

மன்னரிடம் பேசும்போதெல்லாம் முதலில் அவரையும் அவர் ஆட்சியையும் வாழ்த்திப் பேசத்தொடங்குதல் தமிழ் மரபு. கடவுள் பண்புடையாரும் இதுபோலக் கடவுளை வாழ்த்திய பின்னரே, எதுவும் பேசுவர், செய்வர். கடவுள் பெயர் கூறியதும் இதுபோல வாழ்த்தாதிரார். இப்பண்பை இன்னும் கிறித்த வரிடத்தும் இசுலாமியரிடமும் திறம்படக் காணலாம். கடவுள் பெயரோ, கடவுள் பண்புடைய அருட்பெரியார் பெயரோ குறிப்பிடப்படுமிடங்களிலெல்லாம், சமயங்களி லெல்லாம், இசுலாமிய மக்களுள் பேசுவோரும் கேட்போரும் வாசகத்தையே இடை முறித்து, ' இறைவன் திருவடி வாழ்வதாக,' 'பெருமான் திருவருள் பரவுவதாக' என்று கூறிய பின்பே இடையில் முறிவுற்ற வாசகத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்வர்!

திருக்குறளிலும் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய தமிழ்ப்பெருங்காவியங்களிலும் இம் மரபைக் காணலாம்.

மறைமொழியும் நிறைமொழியும்

சு

இரு

தமிழில் ஆசு என்பது உறுதி, புகழ் என்ற பொருள்களைக் குறிக்கும். ஆசிமொழி என்பது உண்மையில் இவ்விரண்டையும் வளர்க்க உதவும் மொழிகள் அல்லது சொற்கள் என்பதே. நிறைமொழி மாந்தராகிய அந்தண்மை சான்ற பெரியோர் பொதுவாக உலகுக்கு நின்று வழிகாட்டும் அறவுரையையோ, தனி மனிதருக்கு வழிகாட்டும் அறிவுரையையோ வழங்கினால் அதனை நாம் நிறைமொழி என்கிறோம்.

‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப!'

என்ற தொல்காப்பிய நூற்பாவும், அதனைப் பின்பற்றி

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்"