பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

29

என்று வள்ளுவர் வகுத்த குறட்பாவும் இவ் வாசி மொழியின் முதல் விடையையே குறித்தன.

நிறைமொழி மாந்தர் தன்மையில் குறையாத சீரிய கவிஞரும் இத்தகைய உறுதி பயக்கும் உரைகளைத் தங்கள் வாழ்த்துரை களில் கூறுவதுண்டு. இவற்றை அகப்புறத் திணைகள் வகுத் துரைத்த தொல்காப்பியர் புறத்திணைகளுள் ஒன்றான காஞ்சித்திணை என்று சிறப்பித்தார். அறவோர்க்குரிய இத் திணையின் பெயராலேயே பண்டைச் சமய அறங்கள் அனைத்துக்கும் நடுநிலைக் களமாக 12ஆம் நூற்றாண்டுவரை நிலவிய காஞ்சி மாநகரம் அப்பெயர் பெற்றதோ என்று கருதல் தகும்!

இத்திணைக்குரிய முழு நூலாகச் சங்க இலக்கியத்தில் முதுமொழிக் காஞ்சி இயங்குகிறது.

மன்னர், வெளிப் புகழுரைகளுக்கிடையே, அகத்துறை சார்ந்த இன்ப உரையாடல்களிடையேகூட, சங்க இலக்கியத்தில் நீதி நூல்களில், அல்லது சமய நூல்களில்கூடக் காணுதற்கரிய உயர் அறவுரைகளை, இடித்துக் கூறும் அறிவுரைகளை, சினந்து கூறும் எச்சரிப்புரைகளைக் காணலாம்!

சமுதாய முதல்வராகிய மேலோர் வாழ்த்துச் சமுதாயம் முழுவதையுமே இயக்குவது. ஆதலால் அவர்கள் வாழ்த்துக்குப் பேராற்றல் உண்டு என்று தமிழர் மதித்தனர். அவர்கள் கண்டனமும் அதுபோலச் சமுதாய நலம் கருதிய எச்சரிக்கையே யாகும். எனவேதான் அவர்கள் சீற்றத்தின் அழிவுக்கு மன்னர் பெருமக்கள்கூட அஞ்சினர்!

Ce

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்த லரிது!"

‘வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம், தகைமாண்ட தக்கார் செறின்!”

என்று வள்ளுவர் மேலோர் சீற்றத்தை வாழ்வின் உச்சநிலை எச்சரிக்கைக் கற்களாக வகுத்ததன் காரணம் இதுவே.