பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

||– –

அப்பாத்துரையம் – 18

வாழ்த்துபவர், வாழ்த்தப் பெறுபவர் ஆகியவரிடையே இயல்பாக உயர்வு தாழ்வுகள், வேறுபாடுகள் இருக்கக்கூடும். ஆனால், வாழ்த்தின் பண்பே அவ்வுயர்வு தாழ்வுகளைச் சரி செய்வதாக அமைகிறது. ஏனெனில், வாழ்த்துபவர் அவா ஆர்வத்தால், அவர் வாழ்வு முழுவதுமே வாழ்த்துக்குரியவர் வாழ்வாகி விடுகிறது. அதே அவா ஆர்வம் அவர் எழுப்பும் நல்லெண்ண அலைகளினூடாகச் சென்று வாழ்த்துக்குரியவர் வாழ்விலும் புகுகின்றது. வாழ்த்துப் பெறுபவர் வாழ்வும் வாழ்த்துபவர் வாழ்வுடன் இணைந்து, அவர் வாழ்வாகி விடுகிறது. வாழ்த்துபவர் வாழ்த்தப்படுபவராகவும், வாழ்த்தப்படுபவர் வாழ்த்துபவராகவும் எளிதில் அமைவதன் காரணம் இதுவே.

வாழ்த்திலிணைந்தவர் அவா ஆர்வமும் நோக்கமுமே அவர்கள் நல்லெண்ணச் சூழலில் இணைந்த யாவரையும் இயக்குவதால், படிப்படியாக, அவர்களைச் சூழ்ந்து வாழ்பவர் அனைவரும் ஒரே ஆர்வத்தில், நோக்கத்தில், பண்பில் இணைந்து, ஒரே அன்பார்வக் குழுவாக அமைகின்றனர். இக்குழுவே மனித இனம் என்னும் அகல நீர்ப்பரப்பில் குடும்பம், சுற்றம், சமுதாயம், ஊர், நாடு, இனம், உலகம் எனப் பரந்து, மனித இனச் சிற்றுறுப்புகளாகவும் பேருறுப்புகளாகவும் அமைகின்றன.மனித நாகரிகமும் பண்பாடும் வாழ்வும் இவற்றையே கொழுகொம் பாகவும், பந்தல்களாகவும் கொண்டு படர்ந்து தழைக்கின்றன.

அறிவுப் பண்பு

வாழ்க என்று வாழ்த்துபவர் அன்புணர்ச்சி மட்டுமன்றி, அறிவுத் திறமும் உடையவரானால், அஃது அவர் வாழ்த்தின் திறத்தைப் பன்மடங்கு பெருக்குவது உறுதி. ஏனெனில், ஆர்வம் அவர்க்கு ஆற்றல் மட்டுமே அளிக்கிறது. அறிவு அவர்க்கு வாழும் வகை காட்டி, ஆற்றல் திசை தப்பிச் செல்லாமலும், இசைவுக் கேடுகள் விளைவிக்காமலும் நல்வழியில் அதைச் செலுத்த உதவுகிறது. வாழும் வகை தெரிந்த அவர் வாழ்வு இலக்கிய வாழ்வாய் அமைகிறது. அவர் அவர் ஆர்வம் பரப்பும் பண்பலை களுடன், வாழும் வகை பற்றிய அறிவலையும் பரவிச் செயலாற்று கிறது. அவர் வாழ்வில் இயங்கி, வாழ்த்துக்குரியவர் வாழ்வையும், அவருடன் பாசத்தால், வாழ்க்கைத் தொடர்பால், இனத் தொடர்