பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

35

பால் இணைந்தவர் வாழ்வையும் இயக்குகிறது. அத்துடன் அவர் அறிவுரையால், வாழ்த்துக்குரியவரும் வாழ்வினத்தவரும் அறிவின் உதவியால் தம் ஆர்வ ஆற்றலையும் உணர்ச்சி ற்றலையும் செயலாற்றலையும் பயன்மிக்க ஆற்றலாக்கு கின்றனர். அவர்கள் கூட்டுழைப்பால் இவ்வாற்றல் எல்லையற்ற வளம் பெற்றுப் பொங்கல் வாழ்வுடன் பொலிவுறுகின்றது.

அன்பு ஒற்றுமை வளர்க்கும். நோக்கம் இந்த ஒற்றுமைக்கு வலுத்தரும். அவர் ஆர்வம் ஒற்றுமையைச் செயலொற்றுமை யாக்கி, செயலை இயக்கி ஊக்கும். ஆயினும், இவ்வாற்றல்கள் பேராற்றல்களேயாயினும், இயற்கை ஆற்றல்கள் போன்ற குருட்டு ஆற்றல்களே . அறிவின் துணையில்லாதபோது, அவை செயலாற்றுமேயன்றி, திசை தெரிந்து, நெறியுணர்ந்து செயலாற்ற மாட்டா, ஏனெனில், அவை தீ, மின்வலி, புயல், பெருவெள்ளம், வெடிமருந்து ஆகியவை போன்றவை.

தீ, குளிர் போக்க, உணவு சமைக்க, இரும்பு முதலிய திண் பொருள்களை வளைத்துருவாக்க உதவுவது. ஆனால், அதுவே நாட்டை அழிக்க, பன்னூறாண்டு வளர்ச்சியுடைய காட்டை ஒரு நொடியில் பொசுக்க வல்லது. மின்வலி எந்திரங்களை இயக்குவது, நகர மக்களுக்கு ஒளியும் காற்றோட்டமும், ஏற்ற இறக்க வாய்ப்பும், தொலைவென்று காலத்தை ஆளும் திறமும் அளிப்பது. ஆனால், அதுவே உயிரினங்களைக் கருக்கி ஒழிக்க, பேரழிவு செய்ய வல்லது. புயலும் வெள்ளமும் மேடுபள்ளமாக்கும். பள்ளம் மேடாக்கும்.பூங்காவைப் பாலைவனமாக்கும்.பாலைவனத்துக்கும்

வளமூட்டிப் பூங்காவாக்கும்.

நட்பு, காதல், வீரம், சினம் முதலிய உணர்ச்சிகள் யாவுமே நன்மை தீமைத் திறமறியாத, கண்ணற்ற, திசை தெரியாத குருட்டு ஆற்றல்கள். அன்பு, அவா, ஆர்வம், நோக்கம் ஆகிய உணர்வுப்படிகள் இவ்வாற்றலைப் பரப்புகின்ற, ஆற்றல் களத்தை விரிவுபடுத்துகின்ற பண்புகளே தவிர வேறல்ல. தீயின் ஆற்றலை எளிதில் பரப்பும் உலர்ந்த சுள்ளிகள் போலவும், புயலின் ஆற்றலைப் பரப்பும் பாலைவெளிகள் போலவும், மின்வலி பரப்பும் ஊடுபொருள்கள் போலவும், நன்மை தீமை தரும் இருவகை உணர்ச்சிகளையும் நாலா திசையில் பரப்பும் எண்ணற்ற பண்புகளே அவை. இயக்கும் ஆற்றல்கள், ஊக்கும் ஆற்றல்