பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் – 18

யானைகளை வீழ்த்த மனித இனத்தார் குழிபறித்து மூடிவைத் திருப்பது வழக்கம்! முதியயானைகள், தம் அனுபவத்தால் இதனை உணர்ந்து, ஒரு காலால் நிலத்தை அழுத்திப் பார்த்துச் செல்லுமாம்!

காட்டில் தன்னாண்மையுடன் நானூறு ஆண்டளவும் வாழும் யானையினம், நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை என்றும் அறிகிறோம். நாட்டில் அதன் இனப்பெருக்கம்கூடத் தளர்வுறுகிறதாம்! மனிதர் நாடு அதற்குக் காடு என்பதை அது அறிந்துள்ளது என்னலாம்! யானையின் குடும்ப, சமுதாய, காண்கிறோம்!

னச் சிந்தனைகளை நாம் இங்கே

குடும்பம், சமுதாயம், இனம் ஆகியவற்றை வளர்க்கத் திட்டமிடும் உயிரினம் மனித இனம் மட்டுமன்று, பல்வேறு படிகளில் பறவைகளிலும் விலங்குகளிலும், பூச்சியினங் களிலுங்கூட அவ்வகைத் திட்டங்கள் வளர்ந்துள்ளன

விலங்கினமும் விலங்கின நிலையிலுள்ள மனிதனும் இத்தகைய சிந்தனைகளாலேயே மனித நாகரிகப்படியை நோக்கி முன்னேற, அப்படியில் மேலும் ஓங்க முடிந்துள்ளது; முடிகிறது.

விலங்கினத்தில்கூட ஏற்பட்டுவிட்ட இந்தச் சிந்தனை மரபு மனித இனத்தில் பெரும்பாலோரிடம் ஏன் பரவவில்லை?

இது சிந்திக்கத்தக்கது

தமிழ் இலக்கிய ஏடுகள் எத்தனையோ இடங்களில் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டியுள்ளன.

மனித இனத்தின் ஒரு புதிர்

மனித இனத்தில் பெரும்பாலோர் சிந்தியாதவர்கள். இன்னும், இருபதாம் நூற்றாண்டிலும் இந்த நிலை! உலகியல் நாகரிக உச்சியில் உலவுவதாகக் கூறப்படும் மேனாடுகளிலும் இந்த நிலை! உலகியல் அறிவு கடந்து கடவுள் பண்பின் உயர் தளங்களில் மிதப்பதாகக் கூறப்படும் கீழை உலகில்கூட இதே நிலைதான்!

மனித

னத்தில் பெரும்பாலோர், விலங்கினத்தில் அன்று.