பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

41

இது குடியாட்சிக் காலம் என்று கூறப்படுகிறது!

குடியாட்சித் தத்துவப்படி, ஓர் இனத்தின் பெரும்பான்மை யினரே அதன் பிரதிநிதிகள் ஆவர். அவர்களே அவ்வினத்தை ஆளுதற்குரியவர்கள். அவர்கள் நலங்கருதியே, அவர்கள் விருப்பத்துக்கிணங்கவே ஆட்சி நடைபெற வேண்டும். அவர்கள் நலமே ஆட்சி நோக்கமாக இருத்தல் வேண்டும்.

சிந்தனையால் உயர்ந்த மனித இனத்தில், வாழ்க்கைச் சிந்தனையால் உயர்நாகரிகம் பெற்ற நாகரிக இனங்களில், நாடுகளில், மனித நாகரிக இனத்தின் பிரதிநிதிகள், மனிதனை ஆட்சி நலத்துக்கே உரியவர்கள் சிந்தனை யற்றவர்கள்!! ஏன் இந்த நிலை?

ஏன் இந்த நிலை? கேட்பார் இல்லை!

மனித இனத்தின் புதிர்-மனித இனத்தின் வருங்காலத்துக்கு எச்சரிக்கையாய் அமையும் சுட்டு விரல் இது!

பெரும்பான்மை மக்கள் சிந்தனையற்றவர்களாய் இருப்பானேன்? இது யார் குற்றம்? அவர்கள் குற்றமா? சிந்தித்த சிறுபான்மையினர் குற்றம்தானா?

சிந்தித்த சிறுபான்மையினரே மனித இனத்தை ஆக்கிய வர்கள்; சிந்திக்கும் சிறுபான்மையினரே இன்னும் அதை வளர்ப்பவர்கள். சிறுபான்மையினரே மனித இனத்தை ஆக்கியவர்கள், இயக்குபவர்கள். ஆனாலும், பெரும்பான்மை மக்கள் சிந்தனைச் செல்வம் பெறவில்லை. இஃது அந்தச் சிந்தனைச் சிற்பிகள் குற்றம்தானா?

அல்ல, அல்ல; அல்லவேயல்ல! சிந்தனையை, சிந்தனைச் செல்வத்தை, இந்தச்சிந்தனைச் சிற்பிகள் தமக்குள்ளாகவே வைத்துக் கொண்டவர்களோ, கொள்பவர்களோ அல்லர். அவர்கள் சிந்தனை தம்மைப் பற்றியதன்று. தம் வாழ்க்கையைப் பற்றியதல்ல; குடும்ப, சமுதாய, இனவாழ்வு பற்றியது. எனவே அவர்கள் சிந்தனை விரிந்து செல்வது! சிந்தனையைக் குடும்ப, சமுதாய இன எல்லைகளில் பரப்புவதே!

சிந்தனை மரபு பரப்பும் இந்தச் செயலை அவர்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளனர்; செய்து வருகின்றனர். அதுவே