பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் – 18

மனித நாகரிகம், பண்பாடு, கலை, கல்வி எனச் செயலாற்றி, மனித இனம் முழுவதும் பரவி வருகிறது, பரவியுள்ளது.

கூட்டு வாழ்வைப் பெருக்கும் அளவுக்கு அவை பரவியுள்ளன. ஆனால்; உழைக்கும் மக்கள் அக்கூட்டு வாழ்வில் பங்குகொள்ளும் அளவுக்கு, சிந்தனை செய்யும் அளவுக்கு அவை பரவவில்லை! பொது மக்களிடையே அவற்றின் பயன் படியுமளவுக்கு அவை பரவவில்லை!

பசுங் கழனியும் பயிரும் அவை வளர்க்கவில்லை. முட்புதர்க் காடும் களைகளுமே வளர்க்கின்றன! வளர்க்கப் பயன்படுத்தப் படுகின்றன!

பெரும்பாலோர் சிந்திக்காதது இன்று அவர்கள் குறையல்ல என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவர்கள் சிந்தியாதவர்கள் மட்டுமல்லர், சிந்திக்க முடியாதவர்கள். சிந்திக்கும் வாய்ப்பற்ற வர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், சிந்திக்கும் வாய்ப்புரிமை பறிக்கப்பட்டவர்கள்!

இது எப்படி நேர்ந்தது? யார் செயல்?

வள்ளுவர் எழுப்பிய வினா

உண்பது, உடுப்பது, உறங்குவது!

உணவு, உடை, உறையுள்!

வை உயிரின் அடிப்படைத் தேவைகள், உயிர்த் தேவைகள்!

இவை கடந்தே மனிதன் வாழ்வு பற்றிச் சிந்திக்க முடியும்!

ஆனால், இம்மூன்றுக்கும் பெரும்பான்மை மக்கள் என்றும் போராட வேண்டியிருக்கிறது; அதிலேயே அவர்கள் வாழ்வு

அழியவேண்டியிருக்கிறது!

சிந்தனையால் வளர்ந்த மனித இனம், சிந்தனையால் மேலும் வளரவேண்டிய மனித இனம், சிந்திக்காதபடி தடுக்கப் பட்டுள்ளது!